»   »  அமிதாப்புக்கு பால்கி கொடுத்த பிறந்தநாள் பரிசாம்... 'ஷமிதாப்’!

அமிதாப்புக்கு பால்கி கொடுத்த பிறந்தநாள் பரிசாம்... 'ஷமிதாப்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனுஷ், அமிதாப் நடிப்பில் பிரபல இயக்குநர் பால்கி இயக்கியுள்ள படம் ஷமிதாப். இப்படம் அடுத்தமாதம் திரைக்கு வருகிறது.

முன்னதாக பால்கி இயக்கத்தில் அமிதாப் நடித்திருந்த சீனிகம், பா படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததால், ‘ஷமிதாப்' குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. இந்தியில் தனுஷிற்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஷமிதாப் கதை உருவான விதம் குறித்து மனம் திறந்துள்ளார் பால்கி. இது தொடர்பாக அவர் கூறியதாவது :

அமிதாப்பின் பிறந்தநாள்...

அமிதாப்பின் பிறந்தநாள்...

அன்று அமிதாப் பச்சனின் 69வது பிறந்தநாள். நேரில் வாழ்த்துவதற்காக புறப்பட்டேன். வழக்கமாக அவருக்குப் பிடித்தமான ஒன்றை அவரது மனைவி மூலம் தெரிந்து கொண்டு, அவருக்கு பரிசளிப்பது என் வழக்கம்.

பூக்கள் வாங்கமுடியவில்லை...

பூக்கள் வாங்கமுடியவில்லை...

ஆனால், இம்முறை ஜெயாபச்சன் வெளிநாட்டில் இருந்தார். அமிதாப் பூக்களை மிகவும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அந்த நேரம் அதை வாங்க சாதகமான சூழலில்லை.

யோசனையோடு பயணம்...

யோசனையோடு பயணம்...

விலை உயர்ந்த ஒயின் வாங்கலாம் என்றால், அமிதாப்பிற்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருந்த இடத்தில் இருந்து அமிதாப்பைச் சென்றடைய எப்படியும் இரண்டு மணி நேரப் பயணம் தேவைப்பட்டது. காரில் யோசித்துக் கொண்டே புறப்பட்டேன்.

பிறந்தநாள் பரிசு...

பிறந்தநாள் பரிசு...

அவரை வாழ்த்தும் போது, காரில் அமர்ந்து யோசித்த அந்த ஐடியாவைக் கூறினேன். அதுதான், ‘ஷமிதாப்'. நான் அன்று அவருக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசும் இந்தக் கதைதான்' என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
While he has an envious body of work as an ad film-maker, it didn’t take long for R Balki to establish himself as a director in the Hindi film industry too. No surprise then, that Balki’s next, Shamitabh, with Amitabh Bachchan and Dhanush, is much anticipated. The director talks about his movie and more.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil