»   »  என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்

என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் கார்த்திக்கின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

My hubby's twitter account is also hacked: Suchitra

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எனது புகழை பிடிக்காமல் பழிவாங்க யாரோ செய்த வேலை இது. என் கணவர் கார்த்திக்கின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது ஃபேஸ்புக் கணக்கை ஹேக் செய்தனர். தற்போது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர். யாரை பழிவாங்க இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுகிறார்கள் என புரியவில்லை என்றார்.

English summary
Singer Suchitra said that her husband Karthik's twitter account is also hacked just like hers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil