என் அம்மாவோட முதல் டோலிவுட் ஹீரோ.. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு.. வனிதா விஜயகுமார் உருக்கம்!
சென்னை: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கு நடிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் மகேஷ் பாபுவின் அப்பாவோடு தான் என் அம்மா முதன் முதலில் தெலுங்கில் நடித்தார் என்கிற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து உருக்கமான இரங்கலை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் காலமானார்
தெலுங்கு திரையுலகின் மூத்த சூப்பர்ஸ்டார் நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் நடிகர் கிருஷ்ணா காலமானார்.

சோகத்தில் மகேஷ் பாபு
ஒரே வருடத்தில் அண்ணன், அம்மா மற்றும் அப்பா என தொடர்ந்து 3 பேரை பறிகொடுத்து துயரின் உச்சிக்கே சென்று விட்டார் நடிகர் மகேஷ் பாபு. சோகத்தில் இருக்கும் மகேஷ் பாபுவுக்கு பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரஜினி கமல் இரங்கல்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணாவுடன் இணைந்து 3 படத்தில் நடித்துள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார் இரங்கல்
தெலுங்கு திரையுலகின் இணையில்லா நடிகர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் ஒரு பெரிய சகாப்தமே முடிவுக்கு வந்து விட்டது என நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்வீட்டில் ரொம்பவே உருக்கத்துடன் போட்டுள்ள பதிவு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தனது அம்மா மஞ்சுளா கிருஷ்ணாவுடன் நடித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

எங்கம்மாவோட ஃபர்ஸ்ட் ஹீரோ
சாந்தி நிலையம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மஞ்சுளா தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வனிதா விஜயகுமார் போட்ட பதிவில், எங்க அம்மாவோட முதல் தெலுங்கு ஹீரோ கிருஷ்ணா தான் எனக் குறிப்பிட்டு அவருடன் மஞ்சுளா நடித்த படங்களின் போஸ்டர்களையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











