Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் படத்தை இப்படி வெளியிட்டிருக்க கூடாது..மானமே போச்சு..இயக்குநர் மீது பாய்ந்த நடிகை மஹிமா நம்பியார்
தன்னுடைய தேவையில்லாத படத்தை ட்விட்டரில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நாயகி மஹிமா நம்பியார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என மானமே போச்சு இனி இந்தியாவே திரும்ப மாட்டேன்னு அவர் ட்வீட்டில் பதிலளித்துள்ளார்.
அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது என நாயகன் விஜய் ஆண்டனி சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா இருந்தது... மேடையில் ஓப்பனாக பேசிய மஹிமா நம்பியார்!

சாட்டையில் அறிமுகமான மஹிமா நம்பியார்
நடிகை மஹிமா நம்பியார் மலையாள நடிகை தமிழில் சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானார். பின்னர் அசுரகுரு, மகாமுனி, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் ஆண்டனியுடன் இணையும் 2 வது படம் ரத்தம் இப்படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

அட இதையெல்லாம் கூடவா படம் எடுப்பீர்கள்
இப்படத்தின் படபிடிப்பு முடிந்து திரும்பிய நிலையில் வாகனத்தின் பயணத்தில் மஹிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். எப்பேற்பட்ட அழகியும், அழகனும் தூங்கும்போது அவர்கள் சுய நினைவு இல்லாமல் இருப்பர். இப்படி அசந்து வாய்பிளந்து தூங்கியுள்ளார் மஹிமா நம்பியார். அப்போது உடன்வந்த இயக்குநர் சி.எஸ் அமுதன் அதை படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தம் டீமின் கடும் உழைப்பு என பதிவிட்டு விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியாரை டேக் செய்து போட்டுள்ளார்.

நெட்டிசன்கள் விமர்சனம்
படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடின உழைப்புதான் என சிலர் கிண்டலடித்தும், சிலர் ஒரு பெண் தூங்குவதை அவருக்கு தெரியாமல் படம் எடுப்பது தவறு அதை பகிர்வது அதைவிட தவறு என விமர்சித்துள்ளனர். நடிகையாக ரசிகர்கள் முன் அழகாக தோன்றுவதைத்தான் அனைவரும் விரும்புவார்கள். இது காமெடிக்கு செய்தாலும் முறையற்ற ஒன்றுதான் என விமர்சிக்கிறார்கள்.

கடுப்பான மஹிமா நம்பியார்
மஹிமா நம்பியார் இந்தப்படத்தைப்பார்த்து "அய்யோ அசிங்கம் அவமானமாக போச்சு இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன் என பதிவிட்டு தயாரிப்பாளரின் கடின உழைப்பு படம் எங்கே" எனக்கேட்டுள்ளார். மஹிமா மேலுக்கு இதை கிண்டல் போல் எடுத்துக்கொண்டாலும் உள்ளூர கடுமையான கடுப்பாகியிருப்பார் என தெரிகிறது. இந்தப்படமே எத்தனை மீம்ஸுகளாக மாறப்போகிறதோ. ஒருவரின் பிரைவசி பற்றி கவலைப்படாமல் அமுதன் பகிர்ந்துள்ளார்.

மஹிமாவை சமாதானப்படுத்திய விஜய் ஆண்டனி
மஹிமா சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் ஹீரோ விஜய் ஆண்டனி "அவங்க hardwork பன்றத பாக்கும் போது. அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு" என போட்டுள்ளார். என்ன செய்தாலும் என்ன படம் சமூக வலைதளங்களில் பரவுகிறதே. இனி நடிகைகள் இதுபோல் ஒன்றாக பயணிக்க மாட்டார்கள். இமேஜ் போச்சுன்னா எப்படி திரும்பும்.