»   »  அக்கா ஸ்ருதிதான் எனக்கு ரோல் மாடல்… சொல்வது கவுதமி மகள் சுப்புலட்சுமி

அக்கா ஸ்ருதிதான் எனக்கு ரோல் மாடல்… சொல்வது கவுதமி மகள் சுப்புலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரிசு நடிகைகள் வரிசையில் அடுத்ததாக வரப்போவது நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி என்பதுதான் இப்போது ஊடகங்களில் பரபரப்பு செய்தி.

கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராவை அடுத்து அதே வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு களமிறங்குகிறார் அதுவும் அவரது அம்மா கவுதமியின் ஆசியோடு. ஏற்கனவே இவர் நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்று ஹீரோயினுக்கு ஏற்ற தகுதியுடன் தயாராக உள்ளார்.

நெளிவு சுழிவு கத்துக்கோ

நெளிவு சுழிவு கத்துக்கோ

சினிமாவில் எப்படி நுழைவது, அதிலுள்ள நெளிவு சுழிவுகள் என்ன என்பதை அக்ஷாராவிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி மகள் சுப்புலட்சுமிக்கு கவுதமி ஆலோசனை கொடுத்துள்ளதாகவும், சினிமாவில் எண்ட்ரி ஆகி வெற்றி பெற வாழ்த்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

நெருக்கமான தோழிகள்

நெருக்கமான தோழிகள்

அக்ஷரா ஹாசனும், சுப்புலட்சுமியும் ஏற்கனவே மிகவும் நெருக்கமான தோழிகள் போல பழகி வருபவர்கள் என்பதால் சுப்புலட்சுமிக்கு உதவுவதில் அக்ஷாராவுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.

ஷமிதாப்பில் பிஸி

ஷமிதாப்பில் பிஸி

அக்ஷரா இப்போது ‘ஷமிதாப்'பில் செம பிஸி. படம் வெளிவருவதற்கு முன்பே தினசரி செய்திகளில் அக்ஷரா வலம் வருவதைக் கண்ட சுப்புவுக்கும், இப்போது சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்திருக்கிறது.

ரோல் மாடல்

ரோல் மாடல்

ஸ்ருதிஹாசனை உன்னுடைய ரோல் மாடலாக ஏற்றுக் கொண்டால், உனக்கு சினிமாவில் வெற்றி நிச்சயம்!'' என்று மகளுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் கவுதமி.

பெயரை மாத்திக்கோ

பெயரை மாத்திக்கோ

உடன் பிறவா அக்கா ஸ்ருதிஹாசனும், ‘‘உனக்கு நடிப்பதற்குத் தேவையான அழகு, திறமை எல்லாமே இருக்கிறது. பெயரை மட்டும் மாற்றிவிட்டு, சினிமாவில் நுழைந்தால் சினிமாவில் நிச்சயம் ஜெயிப்பாய்!'' என்று சுப்புவை வாழ்த்தியிருக்கிறாராம்.

அக்காதான் எல்லாமே

அக்காதான் எல்லாமே

எனவே இப்போது பட நிகழ்ச்சிகளில் எல்லோர் கண்களிலும் பட ஆரம்பித்திருக்கிறார் ஸ்வீட் சிக்ஸ்ட்டீன் சுப்புலட்சுமி.
அக்காதான் இப்போ எனக்கு ரோல் மாடல் கேர்ள்! என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார் சுப்புலட்சுமி.

English summary
Actress Gouthami’s daughter Subbulakshmi has said that her sister Sruthi hassan is her role model

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil