For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விக்ரம் படத்தில் அந்த ’பாம்’ சீன் எப்படி பண்ணாங்க தெரியுமா? பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் பண்ண மைனா!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிக் கொண்டிருப்பதால், வெளியே பி.ஆர் புரமோஷனுக்கு காசு கொடுத்தது முதல் தாங்கள் நடித்த படங்களின் கதை வரை பல விஷயங்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி இருவரும் விஜய்சேதுபதியின் மனைவிகளாக நடித்து இருப்பார்கள்.

  இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற அந்த பாம் சீன் எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்தும் விஜய்சேதுபதி நடிப்புக்காக என்னவெல்லாம் செய்வார் என்பது குறித்தும் இருவரும் மனம் திறந்து பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

  பட வாய்ப்பே இல்லை..அப்படி இறங்கிய நடிகை.. பொழைக்க தெரிஞ்ச புள்ளதான்!பட வாய்ப்பே இல்லை..அப்படி இறங்கிய நடிகை.. பொழைக்க தெரிஞ்ச புள்ளதான்!

  விஜய்சேதுபதி மனைவிகள்

  விஜய்சேதுபதி மனைவிகள்

  கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு 3 மனைவிகள். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஷிவானி நாராயணன், மற்றும் தற்போதைய பிக் பாஸ் போட்டியாளர்களான விஜே மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி விஜய்சேதுபதியின் மனைவிகளாக நடித்துள்ளனர்.

  விக்ரம் மேக்கிங் பற்றி

  விக்ரம் மேக்கிங் பற்றி

  பிக் பாஸ் வீட்டில் முதல் வார முடிவில் கலந்து கொண்ட மைனா நந்தினி தனது ஹவுஸ்மேட்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது விக்ரம் படத்தின் மேக்கிங் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை சக ஹவுஸ்மேட்களுடன் பகிர்ந்து கொண்டார். விஜே மகேஸ்வரியும் அங்கே இருந்த நிலையில், அவரும் தனது அனுபவங்களை கூறினார்.

  பாம் சீன்

  பாம் சீன்

  பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் இருந்த வீடு ரியல் வீடு என்றும் விஜய்சேதுபதி போதைப் பொருள் உருவாக்கும் லேப் தனியாக செட் போட்டு எடுக்கப்பட்டது என்றும் கூறிய மைனா நந்தினி அதனை தொடர்ந்து அந்த பாம் சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பதையும் போட்டு உடைத்தார். சிஜி ஷாட் தான் என சொன்ன நிலையில், சும்மா ஆக்‌ஷன் தான் பண்ணனும் என நினைத்தோம். கண்ணை மட்டும் மூடிக்கோங்க சொன்ன அவர்கள் வாயை மூட சொல்லல.. திடீரென கரிய புகையை முன்னாள் நின்று அடித்ததும் வாய்க்குள்ள எல்லாம் அது போய் பிரெண்ட்ஸ் பட வடிவேலு போல மாறிட்டோம் என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

  மிருகங்களிடம் இருந்து

  மிருகங்களிடம் இருந்து

  விஜய்சேதுபதி சும்மா டெம்பிளேட் நடிப்பை வைத்து ஓட்டுபவர் அல்ல, வில்லத்தனத்திற்காக ஒவ்வொரு மிருகத்தையும் அதன் அசைவுகளையும் பார்த்து கற்றுக் கொண்டு அதனை பல இடங்களில் விக்ரம் படத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு ஷாட்ல அவர் திரும்பி பார்க்கணும்.. சாதாரணமா திரும்ப மாட்டார்.. ஆந்தை கழுத்தை திருப்புவது போல திருப்பி பார்ப்பார் என்று விஜய்சேதுபதியின் நடிப்பு சீக்ரெட்டையும் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

  English summary
  Myna Nandhini opens up about Vikram movie Bomb scene at Bigg Boss Tamil 6 house grabs fans attention. Myna Nandhini and Vj Maheshwari shares about their acting experience in Vikram movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X