டாப் 5ல அசீம் இல்லையா.. டைட்டில் வின்னர் இவர் தானா? மணிகண்டனிடம் ஆருடம் சொன்ன மைனா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் வீட்டில் இருந்து குடும்பத்தினர் வந்து சென்ற நிலையில், அவர்கள் அனைவருமே குறிப்பால் யார் முதலிடத்தில் உள்ளனர் என்பது குறித்து மணிகண்டனிடம் மைனா நந்தினி கலங்கி பேசிய காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.

மைனா நந்தினி மணிகண்டனிடம் சொன்னதுமே வெளியே போய் வேலையை பார்க்க வேண்டியதுதான் என மணி பேசியதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டாப்பில் உள்ளார் என்றும் டைட்டிலை தட்டித் தூக்கப் போவது யார் என்றும் மைனா நந்தினி அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

டைட்டில் யாருக்கு

டைட்டில் யாருக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் எல்லாம் வந்து சென்ற நிலையில், பலரும் விக்ரமன் மற்றும் ஷிவின் இருவரையும் தான் அதிகம் பாராட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில், விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என தெரிகிறது என மைனா நந்தினி கலங்கிய கண்களுடன் மணிகண்டனிடம் கூறியுள்ளார்.

டாப் 5ல் இவங்க தான்

டாப் 5ல் இவங்க தான்

விக்ரமன், ஷிவினைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் டாப் 5 இடத்தில் அமுதவாணன், ரச்சிதா மற்றும் கதிர் ஆகியோர் தான் உள்ளனர் என அடுத்தடுத்த டாப் 5 லிஸ்ட் இவங்க தான் என மணிகண்டனுக்கு உரைக்கும் படி மைனா நந்தினி பேசிய நிலையில், மணிகண்டனும் கடும் அப்செட் ஆகிவிட்டார்.

ரன்னர் அப்புக்கு வந்த சோதனை

ரன்னர் அப்புக்கு வந்த சோதனை

மைனா நந்தினியின் டாப் 5 லிஸ்ட்டில் அசீம் மற்றும் மணிகண்டன் இல்லாதது தான் இதில் ஹைலைட். அசீமுக்கு ஆதரவாக பேசி மணிகண்டனும் டாப் 5 லிஸ்ட்டில் இடம் பிடிக்காமல் போய் விட்டார் என நெட்டிசன்கள் இந்த வீடியோ க்ளிப்பை பார்த்து கலாய்த்து வருகின்றனர். என்னடா ரன்னர் அப்புக்கு வந்த சோதனை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் யாரு

இந்த வாரம் யாரு

மணிகண்டன் அல்லது மைனா நந்தினி இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போறாங்களா என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வருகைக்காகத்தான் மணிகண்டனை இதுவரை உள்ளே வைத்துள்ளனர் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் வந்து விட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டன் எவிக்ட் ஆவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது என்றும் வெளியே போய் வேலையை பாருங்க மணி என கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X