நாய்சேகர் வேஷம் போட்டுட்டு இப்படியா பண்ணுவீங்க மைனா.. கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: சண்டை போடுவது மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லை கலக்கப் போவது யாரு போல காமெடியும் பண்ணலாம் என கமல் கொடுத்த பலே ஐடியாவில் இந்த வாரம் பிக் பாஸ் வீடே பைத்தியக்கார ஆஸ்பத்திரி போல மாறிவிட்டது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆனாலும், சில போட்டியாளர்கள் பர்ஃபார்ம் பண்ண ஸ்டேஜ் கொடுத்ததுமே பக்காவாக ஆக்டிங் பண்ணி அசத்தி வரும் நிலையில், கிடைத்த வாய்ப்பை மைனா நந்தினி சரியாக பயன்படுத்திக் கொள்ளாததை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

கதிர் ஆடிய நடனம், தனலட்சுமி அழுது புரண்டு நடித்ததை எல்லாம் பார்த்து பாராட்டியவர்கள் நாய்சேகர் வேஷம் போட்டுட்டு பர்ஃபார்ம் பண்ணவில்லை என்றால் எப்படி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமல் கொடுத்த ஐடியா

கமல் கொடுத்த ஐடியா

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரே வீட்டில் 100 நாட்கள் போட்டியாளர்களை வைத்து கிளேடியேட்டர் போல சண்டை போடவிட்டு பார்ப்பது என்றெல்லாம் நினைக்க வேண்டாம் என்றும் ஜாலியாக திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த மேடை என நினைத்துக் கொண்டு ஜாலியா விளையாடுங்க என கமல் கொடுத்த ஐடியாவை வைத்து பிக் பாஸ் டீம் இந்த வாரம் போட்டுள்ள கேம் டாஸ்க்கே ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

திறமையை காட்டுறாங்களாம்

திறமையை காட்டுறாங்களாம்

24 மணி நேரமும் கேமரா முன் இருக்கப் போகும் போட்டியாளர்கள் தங்கள் திறமையை எப்போ வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், இந்த வாரம் அதற்காகவே டாஸ்க் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பிரபல நடிகர்கள் போல நடிக்க வைத்து வருகின்றனர். நாய்சேகர் வேஷம் போட்டு மைனா நந்தினி பர்ஃபார்ம் பண்ணியுள்ள ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பர்ஃபார்ம் பண்ணாத மைனா

பர்ஃபார்ம் பண்ணாத மைனா

போட்டியாளர்கள் பர்ஃபார்ம் பண்ண சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட திடீரென பர்ஃபார்ம் செய்ய வேண்டும். நடிகர்களாக இல்லாத கதிர், தனலட்சுமியே தாறுமாறாக பர்ஃபார்ம் செய்யும் நிலையில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான மைனா நந்தினி ஏடிகே கொடுத்த டாஸ்க்கை பர்ஃபார்ம் பண்ண பிடிக்கவில்லை என சொல்லும் ப்ரோமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

சண்டை வெடிக்குமா

சண்டை வெடிக்குமா

இந்த வாரம் அசீம் வழக்கம் போல அமைதியாகி உள்ள நிலையில், மைனா நந்தினியை வைத்து மீண்டும் வார இறுதியில் சண்டை போட வைத்து கமல் பஞ்சாயத்து செய்ய தோதாக இருக்க ஏற்பாடுகள் நடக்கிறதா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வார இறுதியே இப்படி இருக்கே, இந்த வாரம் கமல் எபிசோடு ஒரே பாராட்டு மழையாக இருக்குமே பார்க்க முடியுமா? என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X