பிக் பாஸ்க்கே டாஸ்க் கொடுக்குறது அசீம் தான்… சரியான கேமரா ஃபோக்கஸ் ஆளு: செம்மையா ரோஸ்ட் செய்த மைனா
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா - ராணி, பிபி ரோஸ்ட் என இரண்டு டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டன.
இதில், ராஜா - ராணி டாஸ்க்கில் போட்டியாளர்களிடையே பயங்கரமான சண்டை நிகழ்ந்தது.
இன்னொரு பக்கம் பிபி ரோஸ்ட் டாஸ்க்கில் அசீமின் அட்ராசிட்டியை மைனா நந்தினி வேற லெவலில் இமிடேட் செய்து வெளுத்து வாங்கினார்.

பிக் பாஸ் சீசன் 6 டான்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் ராஜா - ராணி போட்டியும், பிபி ரோஸ்ட் டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டன. அதில் பிபி ரோஸ்ட் டாஸ்க்கில் நேருக்கு நேர் மோதும் இருவர், ஒருவரையொருவர் வறுத்தெடுக்க வேண்டும் என்பதே விதிமுறை. இதில், அசீமும் மைனா நந்தினியும் நேருக்கு நேர் மோதினர். பிக் பாஸ் வீட்டின் டான் போல செயல்படும் அசீமை, மைனா நந்தினி வேறலெவலில் வறுத்தெடுத்தார்.

சரியான கேமரா ஃபோக்கஸ் ஆளு
ரோஸ்ட் பண்லாமா வேண்டாமா என ராப் சாங் ஸ்டைலில் அசீமை ரோஸ்ட் செய்யத் தொடங்கிய மைனா நந்தினி, எல்லாருமே நேராக நடக்கும் போது, அசீம் மட்டும் சைடு வாங்கிய நடப்பான். எந்தெந்த கண்ணாடியில் எங்கெங்கே கேமரா இருக்குன்னு எல்லாவற்றையும் தெரிந்து வைத்துகொண்டு, அதற்கு ஃபோக்கஸ் கொடுப்பதையே வேலையாக வச்சிருக்கான். கேமரா எப்போதும் தன்னை ஃபோக்கஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும் என உஷாரா இருப்பதில் அசீம் தான் நம்பர் ஒன் எனக் கூறினார்.

அது கெத்து இல்ல, முட்டி வலி
அதேபோல், பிக் பாஸ் டாஸ்க் புக் வந்துவிட்டால் எல்லோரும் லிவிங் ரூமில் இருப்போம், ஆனால் அசீம் மட்டும் மேக்கப் போட்டு லேட்டா தான் வருவான். அதுமட்டுமா, பிக் பாஸுக்கே டாஸ்க் கொடுக்குறதோட, அவருக்கே விளக்கமும் கொடுப்பான். எல்லோரும் பிக் பாஸ் டாஸ்க் வந்தால் நின்னுட்டே வாசிப்போம். ஆனால், அசீம் மட்டும் உக்கார்ந்து கெத்தாக தான் வாசிப்பான். அது கெத்துன்னு நினைச்சுக்காதீங்க, அவனுக்கு மூட்டு வலி என பங்கமாக கலாய்த்தார்.

சண்டைலயும் கேமரா தான் உசுரு
கேமராவை ஃபோக்கஸ் செய்து அசீம் நடப்பது மாதிரியே நடந்து காட்டிய மைனா நந்தினி, சண்டை நடக்கும் போது கூட கேமராவுக்கு நேராக வந்து நின்னுட்டே தான் சண்டை போடுவான் என வச்சு செய்தார். அதேபோல், தூங்கும் போது கூட மேக்கப் பண்ணி ஒரு ஆர்ட்டிஸ்ட்டாகவே வலம் வருவது அசீம் மட்டும் தான். அதேபோல், பார்க்க முரட்டு தனமாக இருந்தாலும் பத்து மணிக்கு மேல், ஃபிரிட்ஜில் இருக்கும் ஆப்பிள் உட்பட பழங்கள எடுத்து சாப்ட்டு சும்மா பளபளன்னு ரவுண்டு வரான். கேட்டா பழம் கெட்டுப் போச்சு மச்சான்னு நமக்கே க்ளாஸ் எடுப்பான் என ரோஸ்ட் செய்தார். மைனா நந்தினியின் இந்த ரோஸ்ட்டை சக போட்டியாளர்களுடன் சேர்ந்து அசீமும் பார்த்து ரசித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











