மிஷ்கின் படத்தில் நடிக்கவுள்ளாரா விஜய் சேதுபதி!?.. புது ரோலாக இருக்கே!
சென்னை: இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
பிசாசு 2 படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மும்முரமாக பணி
சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் துப்பறிவாளன் 2ம் பாகத்தை இயக்க இருந்த நிலையில் நடிகர் விஷால் உடனான பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராத வகையில் பிசாசு 2 படத்திற்கான பணிகளை மும்முரமாக தொடங்கினார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
பிசாசு 2 படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். ஆண்ட்ரியா மட்டுமன்றி பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விறுவிறுப்பாக முடிந்தது
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் பதிவு முன்னரே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. பாடல் பதிவு குறித்த அறிவிப்புகள் அனைத்தையும் அவ்வப்போது இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

கவுரவ கதாபாத்திரம்
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேடாக விஜய் சேதுபதி இந்த படத்தில் பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது கவுரவ கதாபாத்திரமாகவே இருக்கும் என தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











