சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் மிஷ்கின் அடுத்ததாக ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரிய போகிறாராம்

சென்னை: பிசாசு 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்காக இயக்குநர் மிஷ்கின் காத்துக் கொண்டிருக்கிறார்.

அதே வேளையில் சவரக்கத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனது தம்பி ஆதித்யா இயக்கும் படத்திற்கு இசையும் அமைக்கிறார் மிஷ்கின்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிப்பது பற்றி மிஷ்கின் பெருமையாக கூறியிருக்கிறார்.

பிசாசு 2

பிசாசு 2

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிசாசு. இந்தp படம் நல்ல வெற்றி பெற்றதால் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்சமயம் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்திருக்கிறார் மிஸ்கின். அதில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பல நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் மிஷ்கின்

இசையமைப்பாளர் மிஷ்கின்

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாதான் இசையமைக்கிறார். லாக் டவுன் நேரத்தில் பின்னணி இசை பணிகளில் அவர் பங்கேற்றால், அவர் மூலம் இளையராஜா அவர்களுக்கு கோவிட் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில், தானே சில காட்சிகளின் பின்னணி இசை மேற்கொண்டுள்ளதாக மிஷ்கின் கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி முறையாக சங்கீதம் பயின்று வரும் மிஷ்கின் தனது தம்பியும் இயக்குநருமான ஆதித்யா இயக்கப் போகும் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

நான் இசையமைப்பாளர் இல்லை

நான் இசையமைப்பாளர் இல்லை

இளையராஜாவின் இசையை கேட்காமல் எந்த ஒரு நாளையும் நான் கடந்ததில்லை. அவரது பாடல்களில் இல்லாத ஒன்றை என்னால் இசையமைக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது இசை அனைவரது வாழ்விலும் ஒன்றிப் போயுள்ளது. அப்படியிருந்தும் கூட ஏ.ஆர்.ரகுமான் எப்படி இன்னும் புதுமையான இசையை கொடுக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. அவரை சந்திக்கும்பொழுது கண்டிப்பாக அதைப் பற்றி கேட்பேன், கூடிய விரைவில் ரகுமானுடன் பணியாற்றுவேன் என கூறியிருக்கிறார். மேலும் எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் போன்றவர்கள்தான் இசையமைப்பாளர்கள், நான் மியூசிக் பண்ணுகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

வில்லன் மிஷ்கின்

வில்லன் மிஷ்கின்

மண்டேலா திரைப்பட இயக்குநர் மடோனா அஸ்வின் தற்சமயம் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதில் முக்கிய வில்லனாக மிஷ்கின்தான் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் நடிக்குமாறு தன்னை அழைத்தபோது, கண்டிப்பாக நடித்துக் கொடுக்கிறேன் செல்லம் என்று கூறினாராம் மிஸ்கின். அது மட்டுமின்றி, சிவா மிகவும் பண்பானவர் அனைவரிடமும் எளிமையாக நடந்து கொள்பவர். கண்டிப்பாக இந்தியாவின் தலைசிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் வருவார் என்று மிஷ்கின் பாராட்டி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X