பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சிகளை நீக்கியது ஏன்?...விளக்கம் தந்த மிஷ்கின்
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா. பாடகி, நடிகையான இவர், பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக பெண்களை மையப்படுத்திய படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Recommended Video
டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ம் ஆண்டு வெளிவந்த பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி உள்ளார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிட்சுமணி, சந்தோஷ், பூர்ணா, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.
விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா
இந்த படத்தில் மிக முக்கியமான காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக சொல்லி பரபரப்பை கிளப்பினார்கள். ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வெளியான இந்த அறிவிப்பு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கால்கள் மட்டும் வெளியே தெரிய ஒரு பெண் நிர்வாணமாக பாத்டப்பில் குளிப்பது போன்றும் காட்சி இடம்பெற்றது.

ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகள் நீக்கம்
படம் பற்றி அடுத்தடுத்து பல தகவல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. இந்நிலையில் சமீபத்தில் பிசாசு 2 படத்தில் இருந்து ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் என்ன காரணத்திற்காக இந்த காட்சிகள் நீக்கப்பட்டன? ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகளை படம் பிடித்தது யார் என்பது பற்றி விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மிஷ்கின்.

அந்த போட்டோவ எடுத்தது யார்?
அதில், பிசாசு 2 படத்திற்காக நிர்வாண காட்சிகளை படமாக்கவில்லை. புகைப்படங்களே எடுக்கப்பட்டது. எனக்கும், ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பரான புகைப்பட கலைஞர் அந்த படங்களை எடுத்தார். நான் கூட அந்த படங்களை பார்க்கவில்லை. பிசாசு 2 படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எதற்காக அந்த சீன் நீக்கப்பட்டது?
அந்த காட்சிகள் இடம்பெற்றால் தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் தான் தருவார்கள். அப்போது குழந்தைகள் பார்க்க முடியாது. அதனால் நீக்கி விட்டேன் என தெரிவித்துள்ளார் மிஷ்கின்.


Click it and Unblock the Notifications











