»   »  'இவர்' தான் எனக்கு எல்லாமே: ட்விட்டரில் ஃபீல் பண்ண சவுந்தர்யா ரஜினிகாந்த்

'இவர்' தான் எனக்கு எல்லாமே: ட்விட்டரில் ஃபீல் பண்ண சவுந்தர்யா ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் வாழ்க்கையில் அனைத்தும் இவர் தான் என தனது ஒரு வயது மகன் வேத் கிருஷ்ணாவின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்துவிட்டார். இருவரும் ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால் தற்போது தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

#MySon #MyEverything: Tweets Soundarya Rajinikanth

கணவரை பிரிந்ததை சவுந்தர்யாவும் உறுதி செய்துள்ளார். இருவருக்கும் இடையே அன்பு இல்லாமல் போனதால் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சவுந்தர்யா தனது மகன் வேத் கிருஷ்ணா மண்ணில் விளையாடும் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு என் மகன், எனக்கு எல்லாமே என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இன்று 32வது பிறந்தநாளை கொண்டாடும் சவுந்தர்யாவுக்கு நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English summary
Soundarya Rajinikanth posted a picture of her son Ved Krishna saying '#LoveOfMyLife #VedKrishna #MySon #MyEverything'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil