Just In
- 21 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 37 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
- 1 hr ago
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
Don't Miss!
- Sports
பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு?
- News
போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'திடீர்னு எனக்கு ஏதும் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க?' விஷாலிடம் வில்லங்கமாகக் கேட்டாரா இயக்குனர் மிஷ்கின்
சென்னை: 'திடீர்னு எனக்கு ஏதும் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க?' என்று நடிகர் விஷாலிடம் இயக்குனர் மிஷ்கின் வில்லங்கமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மிஷகின் இயக்கத்தில் விஷால் நடித்தப் படம், துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது.
தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் நடிகர் விஷால் படத்தை தயாரிக்கிறார். ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். மற்றும் பிரசன்னா, ரகுமான், கவுதமி, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

லண்டனில் ஷூட்டிங்
இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் படக்குழு சென்னைத் திரும்பியது.

மிஷ்கின் நீக்கம்
அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளார். லண்டன் ஷூட்டிங்கிலேயே விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு மிஷ்கின் முறையாக திட்டமிடாததால், அதிக நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

பட்ஜெட் அதிகம்
இந்நிலையில், அடுத்த ஷெட்யூலுக்கு பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகும் என்று சொன்னாராம் மிஷ்கின். தனது சம்பளத்தையும் அதிகமாகக் கேட்டாராம். விஷால் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமான மிஷ்கின், படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பாதி படம் முடிந்த நிலையில் அவர் இப்படிச் சொன்னது விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன பண்ணுவீங்க?
அதோடு, எனக்கு திடீரென்று ஏதும் ஆகிவிட்டால், என்ன பண்ணுவீங்க? அதை போல இப்பவும் பண்ணுங்க? என்று சொன்னாராம் மிஷ்கின். இதையடுத்தே அவரை நீக்கியுள்ளார் விஷால். இதற்கான ஒப்பந்தத்திலும் மிஷ்கின் கையெழுத்து போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அடுத்த ஷெட்யூலில் இருந்த படத்தை நடிகர் விஷாலே இயக்க இருப்பதாகத் தெரிகிறது.
|
சக்ரா ஷூட்டிங்
இதற்கிடையே, விஷால் தயாரித்து நடிக்கும் 'சக்ரா' படத்தின் கடைசி ஷெட்யூல் சென்னை அருகே தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.