Just In
- 5 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 41 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 51 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
Don't Miss!
- Sports
கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- News
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
- Lifestyle
இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொறுக்கிப்பய.. எங்க அம்மாவை அசிங்கமா திட்டுனான்.. விஷாலை ஆக்ரோஷமாக வச்சு விளாசிய மிஷ்கின்!
சென்னை: துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டதற்கு, அவர் போட்ட 15 கண்டிஷன்கள் தான் காரணம் என விஷால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மிஷ்கின்.
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய் ராய் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அந்த படம் வெற்றியடைந்ததால், மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் 2 தொடங்கியது.

மிஷ்கின் நீக்கம்
லண்டனில் பிரம்மாண்டமாக துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு முன்னாள் இயக்குநர், மிஷ்கின் திடீரென 10 கண்டிஷன்களை போட்டதாக ஆதாரத்துடன் நடிகர் விஷால், தெரிவித்து, இதனால், தான் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார் என்பதையும் விளக்கி இருந்தார்.

பதில் சொல்லல
மேலும், எந்த ஒரு தயாரிப்பாளர்களும் இதுபோன்றவர்களிடம் பலியாடாகி விடாதீங்க என்றும் எச்சரித்து இருந்தார். விஷாலின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த அறிக்கை குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இயக்குநர் மிஷ்கின் மெளனம் காத்தது, கோலிவுட் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியது.

விளாசல்
இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தின் புதிய வெப்சீரிஸ் படைப்பான கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில், இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு, அந்த மேடையை பயன்படுத்தி, நடிகர் விஷாலை பொறுக்கி, பொறுக்கிப்பய என சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துள்ளது கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

7 முறை பொறுக்கி
துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டு, விஷாலே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கோபத்தில், மிஷ்கின், நடிகர் விஷாலை பொறுக்கி என தொடர்ந்து 7 முறை திட்டி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். மேலும், மிஷ்கினின் தாயை ஆபாசமாக விஷால் திட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குருக்ஷேத்ர போர்
தொடர்ந்து விஷால் குறித்து வசை பாடிய இயக்குநர் மிஷ்கின், தமிழ்நாட்டை விஷாலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், உன் பக்கம் தர்மம் இருந்தா வாடா குருக்ஷேத்ர போருக்கு என்றும் இனிமே நீ தூங்கவே மாட்ட டா என்றும் பல சபதங்களை செய்தது போல ஆக்ரோஷத்தின் உச்சிக்கே சென்று ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

பேனா இருக்கு
எப்படி வெறுங்கையோடு, பேனா கையில் இருக்கிற நம்பிக்கையோடு, சென்னைக்கு வந்தேனோ, அதேமாதிரி இப்பவும் பேனாவை நம்பி பிழைப்பேன் டா.. சினிமா வாய்ப்புகளே வரவில்லை என்றாலும், வாத்தியாரா போய் பாடம் நடத்துவேன் என கோபக் கனலை வீசி கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில் கண்ணகி அவதாரம் எடுத்து விட்டார் மிஷ்கின்.

கதை எழுத தெரியுமா?
மேலும், விஷாலுக்கு கதை எழுத தெரியுமா? 8 மாதங்கள் நான் சிந்தித்து எழுதிய கதையை, தொடர்ந்து ஆட்களை அனுப்பி, தொல்லை பண்ணி NOC வாங்கியிருக்கான். எந்த எழுத்தாளர்களின் புத்தகங்களையாவது படிச்சிருக்கானா, சக்ரா படத்துக்கே நான் தாங்க கதையை கரெக்ட் பண்ணி கொடுத்தேன் உள்ளிட்ட பல விஷயங்களை மேடைகளை போட்டுடைத்துள்ளார்.