»   »  சொன்னதைச் செய்த மிஷ்கின்.. அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான்!

சொன்னதைச் செய்த மிஷ்கின்.. அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய மிஷ்கின், சாந்தனு நடிப்பில் தான் படம் இயக்கவேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கம்

மிஷ்கின் இயக்கம்

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சாந்தனு நடிக்க உள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

கூட்டணி

கூட்டணி

'சுட்ட கதை', 'நளனும் நந்தினியும்', 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' ஆகிய படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. இயக்குனர் மிஷ்கின், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், சாந்தனு ஆகியோர் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சாந்தனு.

வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

இந்தப் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாந்தனு, "என்னுடைய புதிய பிறப்பு, ஆசீர்வதியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். சாந்தனுவுக்கு இயக்குநர்கள் பார்த்திபன், பாண்டிராஜ், நடிகர்கள் ஆர்யா, வரலட்சுமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்றிய மிஷ்கின்

நிறைவேற்றிய மிஷ்கின்

சமீபத்தில் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தின் விழா ஒன்றில் மிஷ்கின் பேசும்போது, சாந்தனுவை வைத்து தான் ஒரு படம் இயக்குவதாக இருந்து கைவிடப்பட்டதாகவும், நிச்சயம் தான் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்றும் தெரிவித்தார். சொன்னபடியே சாந்தனுவை ஹீரோவாக்கி இருக்கிறார் மிஷ்கின்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சாந்தனு இதுவரை பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிப்பதன் மூலம் நிச்சயம் அவருக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

English summary
Mysskin to direct Bhagyaraj's son Shanthanu in his next film. Speaking at a film function recently, Mysskin said that he would direct Shanthanu. Accordingly, Shanthanu is the hero of Mysskin's film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil