»   »  மிஷ்கின் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த ஓநாய்: பா. ரஞ்சித், நாசர்

மிஷ்கின் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த ஓநாய்: பா. ரஞ்சித், நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிஷ்கின் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த ஓநாய் என இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் நாசர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கியிருக்கும் படம் சவரக்கத்தி. இந்த படத்தில் இயக்குனர் ராம் ஹீரோவாகவும், பூர்ணா ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

படத்தை மிஷ்கின் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ரஞ்சித்

ரஞ்சித்

மிஷ்கின் அண்ணா யாருக்கும் அடங்காத ஓநாய். தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் அவர் யாருக்கும் அடங்காதவர். அவர் மட்டும் அல்ல அவரின் படங்களும் அப்படி தான் என கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் சவரக்கத்தி இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின்

மிஷ்கின்

சவரக்கத்தி படத்தில் ராம் அண்ணா நடித்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அண்ணா நன்றாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.

நாசர்

நாசர்

ஓநாய்கள் எப்பொழுதுமே கூட்டமாக இருக்கும். ஒரு ஓநாய் தனியாக திரிந்தால் அது ரொம்ப திமிர் பிடித்த ஓநாயாகவே இருக்கும். அப்படி திமிர் பிடித்த ஓநாய் தான் மிஷ்கின் என நாசர் தெரிவித்துள்ளார்.

திமிர்

திமிர்

ஒரு கலைஞனுக்கு அந்த ஞான திமிர் நிச்சயம் இருக்க வேண்டும். அந்த திமிர் இல்லை என்றால் அவன் கலைஞனாக இருக்க முடியாது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார் நாசர்.

English summary
Kabali fame director Pa. Ranjith and Nadigar sangam president Nasser have called director Mysskin as a lone wolf.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil