»   »  முதல் முறையாக ஆஸ்கர் நாயகனுடன் இணையும் டைரக்டர் மிஷ்கின்!

முதல் முறையாக ஆஸ்கர் நாயகனுடன் இணையும் டைரக்டர் மிஷ்கின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆஸ்கர் நாயகனுடன் இணையும் மிஷ்கின்!- வீடியோ

சென்னை : இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் 'மெர்சல்' நாயகி நித்யா மேனனும், 'பிரேமம்' நாயகி சாய் பல்லவியும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 'நளனும் நந்தினியும்', 'சுட்ட கதை', 'நட்புனா என்னானு தெரியுமா' ஆகிய படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Mysskin to join with AR Rahman

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திரையுலகினரின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயக்குனர் மிஷ்கினின் இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கினின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா, சுந்தர் சி பாபு, கே, அரோல் கரோலி ஆகியோரை விடுத்து முதல்முறையாக ரஹ்மானுடன் இணையவிருக்கிறார்.

English summary
Shanthanu will be cast in a new film directed by Mysskin. It is reported that AR Rahman will be composing music for this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X