Don't Miss!
- Lifestyle
வரவர செக்ஸில் ஆர்வம் குறையுதா? அப்ப உடம்புல இந்த சத்து குறைவா இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷாரா இருங்க..
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Finance
அடிமடியில் கைவைத்த கூகுள்.. இனி கிரீன் கார்டு வாங்குவது ரொம்ப கஷ்டம்.. அழுது புலம்பும் ஊழியர்கள்..!
- News
ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை..பதுங்கிய ரவுடிகள்..போன் சிக்னல் மூலம் கொத்தாக பிடிக்க டிஜிபி ஆர்டர்
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு சீனியர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
தளபதி 67 ஷூட்டிங்ல இருந்து தான் வரேன்.. செம அடி.. மூஞ்செல்லாம் ரத்தம்.. மிஷ்கின் ஓபன் டாக்!
சென்னை: ஜி தமிழ் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் தளபதி 67 படத்தின் ஹாட் அப்டேட் குறித்து பேசியது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
20 வருடங்களுக்கு முன்னதாக யூத் படத்தில் விஜய்யுடன் வொர்க் பண்ணியிருக்கேன். அன்னைக்கு பார்த்தது போலவே இப்பவும் செம யங்காக இருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்களுக்கு நடிக்க நல்ல ஸ்பேஸ் கொடுத்து வேலை வாங்குகிறார் என செம வெளிப்படையாக தளபதி 67 ஷூட்டிங் அனுபவங்களை மேடையில் பேசி உள்ளார்.
ஓடிடியில் படம் பார்ப்பது ரௌடித்தனம்... 'வெள்ளிமலை' விழாவில் மிஷ்கின் காரசாரப்பேச்சு!

விஜய்யுடன் சண்டை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன் என இயக்குநர்கள் பட்டாளமே நடித்து வருகிறது. ஜி தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின் இப்போ தான் விஜய்யுடன் தளபதி 67 படத்தில் சண்டை போட்டுட்டு வரேன் என பேசி விஜய் ரசிகர்களுக்கு ஹாட் அப்டேட் கொடுத்துள்ளார்.

மூஞ்செல்லாம் ரத்தம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்திலேயே கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி விடுவார் என கூறப்பட்டு வரும் நிலையில், மிஷ்கின் உடனான சண்டைக் காட்சி அரங்கேறி இருக்கிறது. விஜய்யுடன் செம சண்டை.. செம அடி எனக்கு.. மூஞ்செல்லாம் ரத்தம்.. சும்மா அடிச்சு வாயெல்லாம் குழப்பி விட்டுட்டாரு என மிஷ்கின் பேசிய வீடியோ பார்த்த விஜய் ரசிகர்கள் வெறியேறி போயுள்ளனர்.

யூத்தா இருக்காரு
யூத் படத்தில் விஜய்யுடன் வொர்க் பண்ணியிருக்கேன்.. அப்போ பார்த்தது போலவே இப்பவும் அப்படியே யங்கா இருக்காரு விஜய். எப்போ பார்த்தாலும் என்னை அண்ணான்னு தான் கூப்பிடுவாரு.. இப்போவும் செட்டில் அப்படியே அவர் கூப்பிடுறதை பார்த்தால் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு என இயக்குநர் மிஷ்கின் பேசி உள்ளார்.

லோகேஷ் வொர்க் சூப்பர்
சில இயக்குநர்கள் நடிப்பு சொல்லித் தரேன்னு நம்மளையே ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க.. ஆனால், லோகேஷ் வொர்க் சூப்பர்.. சீனை சொல்லிட்டு உங்களை ஃப்ரியா விட்டுருவாரு.. நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்தால் தான் நடிப்பு வெளியே வரும். ஏக்கும் பிக்கும் இடையேயான ஒரு விஷயத்தை தரமா செய்யுறான் லோகேஷ் என பாராட்டி உள்ளார்.

பிக் பாஸ் ஜனனி
பிக் பாஸ் ஜனனியும் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், ரக்ஷித் ஷெட்டி என பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருவதாகவும் படம் வேறலெவலில் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த அப்டேட் ஆரம்பம்
வாரிசு, துணிவு படங்களின் அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொல்லை கொடுத்த நிலையில், இரு படங்களும் வெளியான நிலையில், பாக்ஸ் ஆபிஸ் சண்டை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி அடுத்தகட்டமாக தளபதி 67 மற்றும் ஏகே 62 படங்களின் அப்டேட்களை படக்குழுவினர் மெல்ல மெல்ல கொடுக்க ஆரம்பித்து ரசிகர்களை அடுத்த படம் பக்கம் கவனம் செலுத்த கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்து வருகின்றனர்.