அந்த பாப்பா பேர்கூட எனக்கு தெரியாது.. கீர்த்தி சுரேஷ் பற்றி மிஷ்கின் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: இயக்குநர் மிஷ்கின் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் மாவீரன், லியோ, வணங்கான், டிராகன் என பல படங்களில் நடித்திருக்கிறார். ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் டீசல் படத்தின் ஈவெண்ட்டில் அவர் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவை. இப்போது அவர் ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் அப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர் அவதாரம்: இயக்குநராக கலக்கிவந்த அவர் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களிலேயே ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். இருப்பினும் முழு நேர நடிகராக ஆகாமல் இருந்தார். சமீபகாலமாக அந்த் அவதாரத்தை எடுத்திருக்கிறார். அப்படி அவர் மாவீரன், லியோ, டிராகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் மிஷ்கினின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையிலும் கலக்கும் மிஷ்கின்: வெள்ளித்திரையில் இயக்குநர், நடிகர் என அவதாரம் எடுத்திருக்கும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்துகொண்டிருக்கிறார். இயல்பிலேயே அவர் நன்றாக பாடக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையெல்லாம் தாண்டி அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் பேசும் விதமும், பழகும் விதமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கிற்கும் உதவுகிறது.
சர்ச்சைக்கு குறைவில்லை: இப்படி ஏகப்பட்ட அவதாரங்களை எடுக்கும் சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவர் ஒரு பட விழாவில் கலந்துகொள்கிறார் என்றால்; அவர் பேச்சிலிருந்து ஏகப்பட்ட கன்டென்ட்டுகள் கொட்டி கிடைக்கும். பாட்டல் ராதா படத்தின் விழாவில் அவர் பேசியதுகூட மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி பிறகு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் டீசல் படத்தின் ஈவெண்ட்டில் கலந்துகொண்டார்.
மிஷ்கின் பேச்சு: அவர் அந்த விழாவில் பேசுகையில், "ஹரிஷ் கல்யாண் நான் உனது படங்களை பார்த்தது இல்லை. இப்போது ஒரு பாப்பாவுடன் நடித்துவருகிறேன். அவள் பெயர் கூட; ஹான் கீர்த்தி சுரேஷ். அவளுடைய படங்களையும் நான் பார்த்தது இல்லை. இப்படி சொல்லும் என்னை நீங்கள் பெரிய பருப்பு என்று நினைத்தால் ஆம் நான் பெரிய பருப்புதான்" என்றார். அவரது இந்தப் பேச்சை பார்த்த ரசிகர்களோ எந்த விழாவில் கலந்துகொண்டாலும் தனக்கு தோன்றியதை அசால்ட்டாக பேசுகிறாரே என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
17ல் டீசல் ரிலீஸ்: முன்னதாக டீசல் படமானது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. இவர் க/பெ ரணசிங்கம் படத்தின் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











