»   »  என் பாடல்களில் ஆங்கிலத்தைத் திணிப்பதில்லை! - கவிஞர் நா முத்துக்குமார்

என் பாடல்களில் ஆங்கிலத்தைத் திணிப்பதில்லை! - கவிஞர் நா முத்துக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): திரைப்படப் பாடல்களிலும், கவிதைகளிலும் ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிப்பதில்லை. சொல்ல வந்த கருத்தை நேரடியாக மக்களின் இதயத்திற்கு கொண்டு செல்வதற்காகவே பயன்படுத்துகிறோம் என்று பாடலாசிரியர் , கவிஞர் நா முத்துக்குமார் கூறினார்.

அமெரிக்காவில் டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் நா. முத்துக்குமார் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆங்கிலத் திணிப்பு இல்லை

ஆங்கிலத் திணிப்பு இல்லை

கேள்வி : ஆங்கிலச் சொற்களை பாடல்களில், கவிதைகளில் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?

முத்துக்குமார்: இயல்பாக உள்ள வார்த்தைகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். 'முனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)' என்பதை 'முனியாண்டி விலாஸ் ( அசல் )' என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஒரிஜினல் என்பது கடையின் பெயர்ப் பலகையிலேயே இருக்கிறதல்லவா!

அப்படிப்பட்ட சொற்களை மட்டுமே பாடலாசிரியர்கள், கவிஞர்கள் ஆங்கிலத்தில்
பயன்படுத்திக் கொள்கிறோம். சொல்ல வந்த கருத்தை நேரடியாக மக்கள்
இதயத்திற்கு கொண்டு செல்வதற்கே அவை உபயோகிக்கப் படுகின்றன.

மக்களுக்காகவே இலக்கியம்

மக்களுக்காகவே இலக்கியம்

கேள்வி : ஏன் எளிமையான வார்த்தைகளையே உபயோகிக்கிறீர்கள்?

முத்துக்குமார் : 'உலகத்திலேயே மிக கடினமானது எது என்று கேட்டால், எளிமையான வார்த்தைகளில் எழுதுவது மற்றும் பேசுவதைத்தான் சொல்லலாம். மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் இலக்கியத்தின் முக்கிய நோக்கம்.

'இயற்கை மக்களுக்கு தேவையான அனைத்தையும் எளிமையாகவே கொடுத்துள்ளது. மக்களுக்கு புரியாத வகையில் இலக்கியம் எழுதுகிறவன் அதை ஒரு திரைச்சீலை போட்டு மூடிவிடுகிறான்' என்று பாரதியார் கூறியுள்ளார்.

'நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா?' என்ற கண்ணதாசனின் வரிகள் எளிமையானவைதான். ஆனால் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது. அதேபோலத்தான் ‘ நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' பாடலும்..

அலங்காரமற்ற எளிமையான வார்த்தைகளால் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்த பாடல்கள் நிலைத்து இருக்கும். இன்னும் எளிமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் எழுதவே நான் விரும்புகிறேன். அதை என் பலமாகவே கருதுகிறேன்.

பிடித்த வகையில் படமாக்கப்பட்ட பாடல்கள்

பிடித்த வகையில் படமாக்கப்பட்ட பாடல்கள்

கேள்வி : நீங்கள் எழுதியவற்றில் என்னென்ன பாடல்கள் உங்களுக்கு பிடித்தமான வகையில் படமாக்கப்பட்டுள்ளன?

முத்துக்குமார் : ஏராளமான பாடல்கள் உள்ளன. வெயிலோடு விளையாடி, 7ஜி யில் கண் பேசும் வார்த்தைகள், காதல் கொண்டேனில் தேவதையைக் கண்டேன், ஒரு பாதி கதவு நீயடி, ஆனந்த யாழை மீட்டுகிறாய், அழகே அழகே என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வருத்தமுண்டா?

வருத்தமுண்டா?

கேள்வி : இசையினால் மறைக்கப்பட்டு பாடல் வரிகள் மக்களிடம், சரியாய் போய் சேரவில்லை என்று வருத்தப்பட்டதுண்டா ?'

முத்துக்குமார்: தமிழ் இசை உலக இசையுடன் போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கிறது. துள்ளல் பாடல்களில் இசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பாடல்களை கேட்பதற்கு குழந்தை மன நிலை வேண்டும். சில பாடல்கள் பெரியவர்களுக்கு புரியாதது போலிருந்தாலும் குழந்தைகள் அனைத்து வார்த்தைகளையும் சரியாகப் பாடுவார்கள்.

பறவையைக் கண்டேன், பாடல் எழுதினேன்

பறவையைக் கண்டேன், பாடல் எழுதினேன்

கேள்வி : மனசை உருக்கிய பாடல்களைச் சொல்லுங்களேன்...

முத்துக்குமார் : மனதை உருக்கும் சம்பவங்கள்lதான் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, பாடல்களாகவோ வெளிவருகின்றன. உடனடியாகவோ, பல வருடங்கள் கழித்தோ வரலாம். இங்கே டல்லாஸில் பார்த்த சம்வங்கள் கூட நாளைக்கே ஒரு பாடலில் வர வாய்ப்புள்ளது.

மதராசப்பட்டிணம் படத்தில் பூக்கள் பூக்கும் தருணம் பாடல் எழுதும் போது மலேசியாவில் இருந்தோம். நீண்ட சாலைப்பயணத்தில், மலைகள், அடர்ந்த காடுகளை கடந்து செல்கிறோம். கூர்ந்து கவனித்தால் ஒரு பறவையைக் கூடப்
பார்க்க முடியவில்லை. அந்த நினைப்பிலேயே செல்லும் போது திடீரென ஒரு பெரிய பறவை மரக்கிளையிலிருந்து தத்தித் தாவி பறந்து சென்றது அது தான் உடனடியாக ‘ காற்றில் பறந்த பறவை மறைந்த பிறகும்' என்ற வரியாக மாறியது," என்றார்.

பல்லேலக்கா கேட்டு...

பல்லேலக்கா கேட்டு...

முன்னதாக சிவாஜி படத்தில் வரும் ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்' பாடலில் உள்ள தமிழர் வாழ்க்கை இலக்கியத்தை விவரித்தார். அந்த பாடலைத் தொடர்ந்து கேட்டு வந்த அமெரிக்கத் தமிழர் ஒருவர், தமிழகத்திற்கே திரும்பி வந்து விட்டதை, இயக்குநர் ஷங்கர் மூலம் அறிந்ததாகவும் கூறினார்.

தமிழகத்திற்கு அப்படி திரும்பி வர வேண்டியது இல்லை என்றாலும், தாயகத்துடன் தொப்புள்கொடி அறுந்து விடாமல், தலைமுறைகள் கடந்தும் தொடர்போடு இருக்குமாறு கேட்டுக்கொண்டார் முத்துக்குமார்.

-இர தினகர்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Lyricist Muthukumar revealed that an US Tamil citizen has returned to Tamil Nadu after heard the song Ballelakka from Shivaji to enjoy his motherland.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more