»   »  வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள்! - டல்லாஸில் கவிஞர் நா முத்துக்குமார் பேச்சு

வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள்! - டல்லாஸில் கவிஞர் நா முத்துக்குமார் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்) ஒவ்வொருவர் வீட்டிலும் சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இருப்பதைப் போல் நூலக அறையையும் கட்டாயம் உருவாக்குங்கள் என்று பாடலாசிரியர், கவிஞர் நா, முத்துக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிஞர் நா. முத்துக்குமார் பேசினார்.

Na Muthukkumar participates Tamil New Year celebration at Dallas

மழலையர் கொண்டாட்டம்

முன்னதாக கொங்கு தமிழ்ப் பள்ளி, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நாடகம், நாட்டியங்களை கவிஞர் முத்துக்குமார் கண்டு ரசித்தார். குழந்தைகளின் தமிழ்ப் பேச்சு தன்னை வியக்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும் இந்த குழந்தைகளை நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வையுங்கள் அவர்கள் தமிழில் புலமை பெற்ற எழுத்தாளர்களாக வர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தங்களாலும் சிறந்த பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளைத் தர முடியும் என்று நிருபிக்கும் வகையில் மாணவர்களின் நடனங்கள் அமைந்து இருந்தது

Na Muthukkumar participates Tamil New Year celebration at Dallas

புலம் பெயர் தமிழ் இலக்கியம்

"தமிழ் ஒரு வீரமான மொழி, தமிழ் மருத்துவரைப் போல, குறில் ஒரு மாத்திரை நெடில் இரண்டு மாத்திரை என்று ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு மாத்திரையை கொடுத்துள்ளது. தன்மான மிக்க மொழி. தேவையான இடத்தில் கால் மேல் கால் போட்டுக்கொள்ளும். குழந்தைகளை நிறைய தமிழ் வாசிக்கப் பழக்குங்கள். என் தந்தை சிறுவயதிலேயே நூற்றுக்கணக்கான புத்தகங்களை என்னை வாசிக்க வைத்தார். அது தான் இன்று உங்களிடம் என்னை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

இலக்கியம் மட்டுமே வாழ்க்கையை மற்றும் தன்னம்பிக்கையை கற்றுத் தரும். வீட்டிலே சமையலறை, படுக்கையறை இருப்பது போல் நூலக அறை அமைத்து புத்தகங்களை அடுக்கி வையுங்கள். பெரியவர்கள் நீங்களும் படித்து அடுத்த தலைமுறை குழந்தைகளையும் படிக்க வையுங்கள்," என்று வேண்டுகோள் விடுத்தார் முத்துக்குமார்.

Na Muthukkumar participates Tamil New Year celebration at Dallas

'புலம் பெயர் தமிழ் இலக்கியம் என்ற புதிய இலக்கியம் வளர்ந்துள்ளது. உங்கள் வாழ்க்கையை, மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, சிக்கலான தருணங்களை பதிவு செய்யுங்கள். தினம் தோறும் ஒரு பக்கம் எழுதி வந்தால், ஆண்டு இறுதியில் 365 இல்லை என்றாலும் குறைந்தது மூன்று பக்கங்களாவது சிறந்த படைப்பாக அமையும். நீங்களும் ஒரு எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள் என்றார் முத்துக்குமார்.

சித்திரைத் தெருவிழா

டல்லாஸ் நகரில் முதன் முறையாக கடைவீதி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள்,
உணவகங்கள் என ஊர்த் திருவிழாவை நினைவு படுத்தும் வகையில் தெரு விழாவாக கொண்டாடினார்கள்.

கைவினைப் பொருட்கள், துணிக்கடைகள், தங்க முலாம் பூசிய வெள்ளி ஆபரணங்கள் உட்பட வெவ்வேறு வகையான கடைகள் இடம் பெற்றிருந்தன. பசியாறுவதற்கு அமெரிக்க . சைனீஸ் மற்றும் இந்திய உணவகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோசைக் கடை, கோன் ஐஸ் பஞ்சு மிட்டாய் கடை என திருவிழாக் கடைகளையும் போட்டிருந்தார்கள். மணக்க மணக்க மல்லிகைப் பூவும் படு ஜோராக விற்றுத் தீர்ந்தது .

Na Muthukkumar participates Tamil New Year celebration at Dallas

குதித்து விளையாடுமிடம், மலை ஏறுதல், விலங்குகளுடன் விளையாடுதல், ஃபேஸ் பெயிண்டிங் என்று குழந்தைகளை குதுகுலமூட்ட பலவேறு எற்பாடுகள் செய்யப்பட்டிந்தன.

குழப்பம் தவிர்த்து இன்றைய நாளை நன்றே வாழுங்கள்!

பேச்சாளர் சுகி சிவம், வழக்கறிஞர் சுமதி, மணிகண்டன் ஆகியோரின் பேச்சரங்கம் நடைபெற்றது.

சுமதி பேசும் போது, "பெற்றோர்கள் தமிழகத்திலும், குழந்தைகள் அமெரிக்காவிலும் இடையே எந்த பக்கம் செல்வது என்ற தவிப்புடன் இங்கே பெரும்பாலோனோர் இருக்கிறார்கள்.

தாயகத்தை விட இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்று தான் வந்துள்ளீர்கள். ஊர் திரும்பி பெற்றோருடன் இருப்பதா அல்லது குழந்தைகளுக்காக இங்கேயே இருப்பதா என்று தெளிவான முடிவெடுங்கள். பின்னர் அதற்கேற்றார் போல் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களுக்காக வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட சென்று வரலாம். ஆனால் குழப்பம் தவிர்த்து தெளிவான முடிவெடுத்து மன நிம்மதியுடன் வாழுங்கள்," என்று கூறினார்.

சுகி சிவம் பேசுகையில், "நேற்று முடிந்து போனது, நாளை நிச்சயமற்றது, இன்றே நிலையானது அதை நன்றாக அனுபவித்து மன நிறைவுடன் வாழுங்கள்," என்றார்.

தொடர்ந்து மனோ, சித்ரா, விஜய் பிரகாஷ், நிகில் மேத்யூ, பார்வதி மேனன் பங்கேற்ற இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

விழாவில் 1500 க்கும் மேலானோர் கலந்து கொண்டனர். சங்கத் தலைவர் கால்டுவெல், செயலாளர் புகழ், பொருளாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

-இர தினகர்

English summary
Dallas Metroplex Tamil Sangam celebrates Tamil New Year in traditional style and Poet Na Muthukkumar participates as a special guest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X