»   »  தேவி வெற்றி விழா... மறைந்த முத்துக்குமார் மகனைக் கவுரவித்த படக்குழு!

தேவி வெற்றி விழா... மறைந்த முத்துக்குமார் மகனைக் கவுரவித்த படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவி படத்தின் வெற்றி விழாவில், மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் மகனை மேடையில் ஏற்றி கவுரவித்தனர் விழாக் குழுவினர்.

பிரபு தேவா ஸ்டூடியோ சார்பில் பிரபுதேவா, ஐசரிகணேஷ் இணைந்து தயாரித்த படம் 'தேவி'. விஜய் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், சோனுசூட் ஆகியோர் நடித்திருந்தனர்.

Na Muthukkumar's son honoured at Devi stage

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த படத்தின்அனைத்து பாடல்களையும் கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிஇருந்தார். அவருக்கு வழங்க வேண்டிய கேடயத்தை நா. முத்துக்குமார் மகன் ஆதவன் மேடைக்கு வந்து பெற்றுக்கொண்டார்.

விழாவில் தென் இந்திய நடிகர்கள் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜீவா, விக்ரம் பிரபு, பரத், பார்த்திபன், இயக்குநர்கள் ரவிக்குமார், நடிகைகள் மீனா, லிசி, சங்கீதா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

English summary
The crew of Devi movie has honoured late poet Muthukkumar's son Adhavan at the movie's success event.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil