For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே! #NaMuthukumar

|

சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயர் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளது.

காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்டவர் பாடலாசிரியரும் கவிஞருமான நா முத்துக்குமார் அவர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்த நா முத்துக்குமாருக்கு ஜீவலக்ஷ்மி என்ற மனைவியும் ஆதவன் என்ற மகனும் யோகலக்ஷ்மி என்ற மகளும் உள்ளனர்.

தனது கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியில் முடித்த நா முத்துக்குமார் சினிமா இயக்குநராக விரும்பினார். இதற்காக இயக்குநர் பாலுமகேந்திராவிடம் 4 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

எலும்பு இருக்கு, சதை எங்கே?: பிரபல பாடகியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

மரணம் வரை

மரணம் வரை

பின்னர் பாடலசிரியர் அவதாரம் எடுத்த அவர் பல படங்களுக்கு பாட்டு எழுதி தமிழக பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சினிமாவில் பாடல் எழுதத் தொடங்கிய காலம் முதல் மரணம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக திகழ்ந்தார்.

எவர்க்ரீன் பாடல்கள்

எவர்க்ரீன் பாடல்கள்

பல முன்னணி கவிஞர்களும் வியக்கும் வகையில் பாட்டெழுதி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். 7ஜி ரெயின்போ காலனி, வெயில், சந்திரமுகி, நந்தா, கஜினி, காதல் கொண்டேன், சண்டக்கோழி, காதல், தீபாவளி, போக்கிரி, பீமா, கிரீடம், சத்தம்போடாதே, வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, நீதானே என் பொன்வசந்தம், யாரடி நீ மோகினி, மதராசபட்டினம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நா முத்துக்குமார் எழுதிய பாடல்கள் எவர்க்ரீன்.

தேசிய விருதுகள்

தேசிய விருதுகள்

இரண்டு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் நா முத்துக்குமார். 2013ஆம் ஆண்டு வெளியான தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்கும் சைவம் படத்தில் இடம் பெற்ற அழகே அழகே என்ற பாடலுக்கும் சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருதை பெற்றார் நா.முத்துக்குமார்.

கவிதை தொகுப்புகள்

கவிதை தொகுப்புகள்

ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார் நா முத்துக்குமார். நியூட்டனின் மூன்றாம் விதி, பாட்டாம்பூச்சி விற்பவன், தூசிகள் உள்ளிட்ட கவிதை தொகுப்புகள் மிகவும் பிரபலம். கிராமம் நகரம் மாநகரம், ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், வேடிக்கை பார்ப்பவன், அணிலாடும் முன்றில் உள்ளிட்ட நூல்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றவை.

நா முத்துக்குமார் மரணம்

நா முத்துக்குமார் மரணம்

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது 41 வயதில் காலமானார் நா முத்துக்குமார். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புகழஞ்சலி

புகழஞ்சலி

நா முத்துக்குமாரின் 44வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டிவிட்டரில் நா முத்துக்குமார் (NaMuthukumar) என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கி நெட்டிசன்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

English summary
Na Muthukumar's 44th birthday celebrates today. Na Muthukumar died on August 14th 2016.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more