»   »  தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!

தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

‘சைவம்' படத்தில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதி உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடி, நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றுத் தந்த பாடல் வரிகள்... இதோ..

இந்தப் பாடலைப் பாடிய உத்ரா உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

Na Muthukumar's national award winning song

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு !

சரணம் 1

குயிலிசை அது பாடிட - ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட - ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்தே சென்றிட வழித் துணைதான் தேவையா ?

கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !

கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு !

சரணம் 2

இதயமும் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்...

இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே

நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே...

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !

அதையும் தாண்டிப் பேசும் நம் நேசம் ரொம்ப அழகு !

English summary
Here is Na Muthukumar's lyrics placed in Saivam movie that won the national award this year.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil