»   »  அடங்குற ஆளா இயக்குனர் பாலா?: நாச்சியார் ப்ரொமோ வீடியோவில் வச்சு செஞ்சுட்டாருல

அடங்குற ஆளா இயக்குனர் பாலா?: நாச்சியார் ப்ரொமோ வீடியோவில் வச்சு செஞ்சுட்டாருல

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாச்சியார் படத்திற்கு இசை வெளியீடு விழாவே கிடையாது - பாலா

சென்னை: நாச்சியார் ப்ரொமோ வீடியோவில் மீண்டும் ஒரு பன்ச் வைத்துவிட்டார் பாலா.

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள நாச்சியார் படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாலா இசை வெளியீட்டு விழா எதுவும் நடத்தவில்லை.

ஜோதிகா

ஜோதிகா

நாச்சியார் படத்தின் முதல் டீஸர் வெளியான போது அதில் ஒரேயொரு வசனம் அதுவும் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை இருந்தது. அதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மீண்டும்

படம் ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார் பாலா. அதில் அனைத்து மதங்களின் பாடல்கள் வருகின்றது. இறுதியில் ஜோதிகா கோவிலாக இருந்தாலும் குப்பைமேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்னு தான் என்கிறார்.

சர்ச்சை

சர்ச்சை

எந்த படம் வந்தாலும் சர்ச்சையை கிளப்புவதற்கு என்றே சிலர் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜோதிகா வேறு இப்படி ஒரு வசனத்தை பேசியிருக்கிறார். சொல்லவா வேண்டும், கங்கிராட்ஸ் பாலா உங்களுக்கு இலவசமாக விளம்பரம் தேடிக் கொடுக்க பலர் வருவார்கள்.

சினிமா

சினிமா

படத்தை படமாக பார்க்காமல் சும்மா எதற்கெடுத்தாலும் சர்ச்சையை கிளப்பி படத்திற்கு தடை விதிக்கச் சொல்லும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். இவர்கள் பிரச்சனை செய்வது ஒரு வகையில் படத்திற்கு நல்ல விளம்பரமாகிவிடுகிறது. ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு யார், யாரெல்லாம் பிரச்சனை செய்ய கிளம்புகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Direcror Bala has released a promo video of his upcoming movie Naachiyaar that is hitting the screens tomorrow. Jyothika is seen saying a dialogue which might make some people to condemn.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil