»   »  4 மில்லியனைத் தொட்டது நாச்சியார் டீசர்... பட ரிலீஸ் எப்போது?

4 மில்லியனைத் தொட்டது நாச்சியார் டீசர்... பட ரிலீஸ் எப்போது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு சின்ன டீசர்... அதிலும் ஒரே ஒரு வார்த்தைதான்... பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது பாலாவின் நாச்சியார். அந்த டீசருக்கு இதுவரை 4 மில்லியன் பார்வைகள் கிடைத்திருக்கின்றன.

பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Naachiyaar targets Christmas holydays

இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடையும் நிலையில் படத்துக்கு சென்சார் சான்று பெற ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளனர். படத்தை வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

நாச்சியார் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா தே.. பயலுங்களா... என்று ஒரு வார்த்தையை உச்சரிக்க, அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் விளைவு இதுவரை இந்த டீசரை 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

English summary
Bala is planning to release Naachiyaar movie at Christmas holydays

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil