For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாடோடிகள் 2வா? இல்லை ஆம்பள பார்ட் 2வா? ஒரே அடியில் காரை பறக்க விடுகிறார் சசிகுமார்.. என்ன பாஸ்!

  |

  சென்னை: சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி இருக்கிறது.

  மேலும், நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்த இந்த படம் வரும் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  2009ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் இருக்குமா? என்ற சந்தேகத்தை டிரைலர் பார்த்த ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

  கவர்ச்சி உடையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து.. நடிகையின் வைரல் வீடியோ!

  நாடோடிகள்

  நாடோடிகள்

  சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், பரணி, விஜய் வசந்த், அனன்யா, அபிநயா, கஞ்சாகருப்பு நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த படம் நாடோடிகள். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு, சசிகுமார் - சமுத்திரகனி கூட்டத்தில் புதிய முயற்சியாக உருவாகி இருந்த நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

  அவசர காதல்

  அவசர காதல்

  நண்பனின் காதலுக்காக எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என மூன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பல சிக்கல்களை சந்தித்து காதல் ஜோடியை சேர்த்து வைத்தால், கொஞ்ச நாட்களில் இருவரும் பிரிந்து இந்த மூவரையும் அப்செட் செய்து விடுவார்கள். அவர்களை பழிவாங்க மீண்டும் களமிறங்கும் நாயகர்கள் சென்டிமென்ட் கிளைமாக்ஸுடன் படத்தை முடித்திருப்பார்கள்.

  இத்தனை வருஷம்

  இத்தனை வருஷம்

  கிட்டத்தட்ட 10 வருஷம் கழித்து நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் இருந்த வித்தியாசமான திரைக்கதை இரண்டாம் பாகத்தில் இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். சமுத்திரகனி இந்த முறை நாடோடிகள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படத்தை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  சொதப்பல் டிரைலர்

  தற்போது நாடோடிகள் 2 டிரைலரை இயக்குநர் சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் முழுவதும் தேவையில்லாத ஸ்டன்ட் காட்சிகளும் சுமாரான வசனங்களுமே இடம்பெற்றுள்ளதாக டிரைலருக்கு கீழே ரசிகர்கள் கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர். முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் இருக்காது என்பதே அவர்களின் எண்ணம்.

  லேட் ரிலீஸ்

  நாடோடிகள் 2 படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏகப்பட்ட ரிலீஸ் தேதிகள் தள்ளிப் போய், கடைசியாக தற்போது வரும் ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால தாமதத்துக்கு பிறகு வெளியாகும் படங்கள் பெரும்பாலும், பெரிய வெற்றியை ஈட்ட வாய்ப்பில்லை. அண்மையில் வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா படமும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

  அரசியல் வசனங்கள்

  அரசியல் வசனங்கள்

  மேலும், நாடோடிகள் 2 படம் உறியடி படம் போல அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் என்றே தோன்றுகிறது. டிரைலரில், வரும் அண்ணல் அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், வேலு நாச்சியார் போன்ற வசனங்கள் அதனை தீவிரமாக தெளிவு படுத்துகின்றன. ஆனால், ஆம்பள படத்தில் வருவது போன்று ஒரு கட்டையை வைத்து அடித்து காரை பறக்க விடுவது எல்லாம் படத்தை நிச்சயம் காப்பாற்றுமா என்பது சந்தேகம் தான்.

  English summary
  Samuhirakani’s directorial venture Naadodigal 2 trailer out now. Sasikumar, Anjali, Athulya, Bharani starrer movie will be release on Jan 31st this month.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X