»   »  'நாகினி' மவுனி ராய்க்கும், டிவி நடிகருக்கும் திருமணமா?

'நாகினி' மவுனி ராய்க்கும், டிவி நடிகருக்கும் திருமணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாகினி தொடர் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய்க்கும், டிவி நடிகர் மோஹித் ரெய்னாவுக்கும் திருமணம் என்று தகவல் வெளியானது.

நாகினி என்கிற ஒரேயொரு டிவி தொடர் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். இந்தி சீரியலான நாகினி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

காதல்

காதல்

மவுனி ராயும், டிவி நடிகர் மோஹித் ரெய்னாவும் காதலித்து வருகிறார்கள். சிவம் தொடரில் சிவனாக நடிக்கிறாரே அவர் தான் மோஹித் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணம்

மவுனி ராயும், மோஹித்தும் தங்களின் காதலை ரகசியமாக வைத்துள்ளபோதிலும் அவர்கள் பல இடங்களுக்கு ஜோடி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

மவுனி ராய்

மவுனி ராய்

மோஹித்துடனான திருமணம் குறித்து மவுனி ராய் மறைமுகமாக பேசினார். ஆனால் மோஹித்தோ மவுனியுடன் திருமணம் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறிவிட்டார்.

மோஹித் ரெய்னா

மோஹித் ரெய்னா

மவுனியுடன் திருமணம் என்ற வதந்தி எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதற்கு அவசரப்படவில்லை என்று மோஹித் தெரிவித்துள்ளார்.

English summary
TV actor Mohit Raina rubbished the rumour that he and Naagin actress Mouni Roy are getting married in 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil