கோவாவில் காதலரை மணந்தார் நாகினி நடிகை மெளனி ராய்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்

மும்பை: நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். அவருக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.

மெஹந்தி, ஹல்தி என ஏகப்பட்ட சுப நிகழ்ச்சிகளுடன் நடிகை மெளனி ராயின் திருமண வைபவம் களைகட்டி வருகிறது.

மந்திரா பேடி உள்ளிட்ட பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

படு ரகசியமாக

படு ரகசியமாக

பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் படு ரகசியமாக செய்து வந்தார். ஆனால், துபாயில் இல்லாமல் கோவாவில் தான் மெளனி ராயின் திருமணம் நடைபெற உள்ள தகவல்கள் ஏற்கனவே கசிந்திருந்தன. இந்நிலையில், இன்று கோவாவில் கோலாகலமாக திருமண வைபவங்கள் நடைபெற்று வருகின்றன.

முதல்முறையாக

முதல்முறையாக

இதுவரை தனது காதலர் மற்றும் வருங்கால கணவர் சுராஜ் நம்பியார் உடன் எந்தவொரு புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருந்து வந்த நடிகை மெளனி ராய் இன்று முதல்முறையாக 'Everything' (எனக்கு எல்லாமே இனி அவர் தான்) என்கிற கேப்ஷன் உடன் அவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.

மந்திராபேடி பங்கேற்பு

மந்திராபேடி பங்கேற்பு

நடிகை மெளனி ராயின் நெருங்கிய தோழியான நடிகை மந்திராபேடி கோவாவில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். நடிகை மெளனி ராய் மற்றும் மாப்பிள்ளையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை மந்திராபேடி ஷேர் செய்துள்ளார். கணவரை இழந்து வாடி வந்த மந்திரபேடி தற்போது தான் சந்தோஷமாக ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

மெஹந்தி ஃபங்க்‌ஷன்

மெஹந்தி ஃபங்க்‌ஷன்

மஞ்சள் நிற லெஹங்காவில் மணப்பெண்ணாக ஜொலிக்கும் நாகினி மெளனி ராயின் கைகளில் சிவக்கும் மருதாணியை வைத்து நடைபெறும் மெஹந்தி ஃபங்க்‌ஷனும் கோவாவில் நேற்று நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலம் ஆஷ்கா கொராடியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆஷ்கா கொராடியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நலங்கு விழா

நலங்கு விழா

ஹல்தி எனக் கூறப்படும் நலங்கு விழாவும் கோலாகலமாக கோவாவில் நடைபெற்று வருகின்றன. மணப்பெண் மெளனி ராய் மற்றும் மணமகன் சுராஜ் நம்பியார் இருவரும் காதலையும் அன்பையும் பரிமாறிக் கொள்ளும் திருமண வைபவ நிகழ்வுகளின் புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

மணமேடையில் மெளனி ராய்

மணமேடையில் மெளனி ராய்

சுராஜ் நம்பியார் மற்றும் மெளனி ராய் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக தம்பதியினர் ஆகி விட்டனர். கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X