நிர்வாணமாக வராதே.. என் கவர்ச்சி உடையை பார்த்து நண்பர்களே பாடி ஷேம் பண்றாங்க.. டிவி நடிகை ஆதங்கம்!

மும்பை: நாகினி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை நியா ஷர்மா தனது நண்பர்களே தன்னை பாடி ஷேம் பண்றாங்க என புலம்பி உள்ளார்.

நேகா ஷர்மா எனும் பெயரை நியூமராலஜி காரணமாக நியா ஷர்மா என மாற்றிக் கொண்ட இவர் ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

ஜமாய் ராஜா, நாகினி, ட்விஸ்டட், காளி, மெரி துர்கா, லேடிஸ் வெர்சஸ் ஜென்டில்மேன் உள்ளிட்ட ஏகப்பட்ட டிவி தொடர்களில் நடித்துள்ளார்.

நாகினி சீரியலில்

நாகினி சீரியலில்

31 வயதாகும் சின்னத்திரை நடிகை நியா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்து வருகிறார். நாகினி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் மெளனி ராய் நடித்திருந்த நிலையில், மூன்றாவது பாகத்தில் இருந்து 5வது பாகம் வரை நாகினியாக நடித்து வருகிறார் நியா ஷர்மா.

7 மில்லியன் ரசிகர்கள்

7 மில்லியன் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகையான நியா ஷர்மாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தொடர்ந்து இவர் பதிவிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களை லைக் செய்யவே ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் சுற்றி வருகிறது. கவர்ச்சி உடைகளை அணிந்தபடி இவரும் ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

மோசமான போட்டோஷூட்

மோசமான போட்டோஷூட்

ஆடை ஏதும் அணியாமல் வெறும் துண்டு மட்டுமே அணிந்து கொண்டும் அரைநிர்வாண கோலத்தில் இருப்பது போல அதிக தாராளமான உடைகளை அணிந்தும் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்ளை பார்த்து பலரும் இவரை பாடி ஷேமிங் செய்து வருகின்றனர். கமெண்ட் பக்கத்தில் இதற்கு நீங்கள் ஆடை அணியாமலே போஸ் கொடுக்கலாம் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருவது வாடிக்கையாகி விட்டது.

பாடி ஷேமிங் பண்றாங்க

பாடி ஷேமிங் பண்றாங்க

பிரபல நடிகைகள் 6 இன்ச் அளவுக்கு கவர்ச்சி காட்டி வரும் நிலையில், என்னுடைய 7 இன்ச் ஆழமான கவர்ச்சி உடைகள் உங்களை என்ன செய்கிறது என கேட்டேன். ரசிகர்களை விட என்னுடன் நெருங்கி பழகி வரும் நண்பர்களே என்னை பாடி ஷேமிங் செய்வது என்னை பெரிதும் பாதிப்படைய செய்கிறது என சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நிர்வாணமாக வராதே

நிர்வாணமாக வராதே

விருது விழா நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அதீத கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதனை பாராட்டி வரும் நிலையில், நெருங்கிய தோழிகளே இப்படி நிர்வாணமாக வராதே என பேசுவது மனதுக்கு பெரிய வேதனையை அளிக்கிறது. சோஷியல் மீடியாவில் முகம் தெரியாத விஷமிகள் அடிக்கும் மோசமான கமெண்ட்டை விட கூட இருப்பவர்களே இப்படி பேசுவது கஷ்டமாக இருக்கிறது என பேசியுள்ளார் நியா ஷர்மா.

இதை சொல்றதுக்கு அவங்க யாரு

இதை சொல்றதுக்கு அவங்க யாரு

ஒருவர் இதை தான் செய்ய வேண்டும் என்றும் இப்படித் தான் உடை உடுத்த வேண்டும் என்று சொல்வதற்கு நண்பர்களுக்கு கூட தகுதியில்லை என்றும் அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ போகும் சூழலில் இப்படி அடுத்தவர் குறித்து நட்பு வட்டம் மற்றும் தெரிந்தவர்களே இப்படி மோசமாக பேசுவது தவறான விஷயமாக பார்க்கிறேன் என மனம் திறந்து தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X