நாய் சேகர் ஃபஸ்ட் சிங்கிள்... எப்போ ரிலீஸ் தெரியுமா ?
சென்னை : பிரபல காமெடி நடிகரான சதீஷ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் நாய் சேகர். இந்த படத்தில் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ர லட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
கிஷோர் ராஜ்குமார் இயக்கி வரும் இந்த படத்தை கேஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜீஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நாய் சேகர் படத்தின் சிங்கிங் டிராக்கிற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தில் தனது பகுதி ஷுட்டிங்கை நிறைவு செய்து விட்டதாக பவித்ரலட்சுமி சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நாய் சேகர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் தான் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட உள்ளதாம். இன்று (டிசம்பர் 10) மாலை 5 மணிக்கு நாய் சேகர் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் என கல்பாத்தி எஸ்.அகோரம் அறிவித்துள்ளார்.
இந்த ஃபஸ்ட் சிங்கிளை தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்களான ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர். இந்த தகவலை பவித்ர லட்சுமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட அடுத்த நாளே, சதீஷ் நடித்து வரும் நாய் சேகர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் சற்றே குழம்பிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











