For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாண்டஸ் புயலில் சிக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்... டல்லடித்த வடிவேலுவின் பாக்ஸ் ஆபிஸ் கனவு

  |

  சென்னை: இந்த வாரம் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

  நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

  அதேபோல், ட்ரெய்லரில் கவனம் ஈர்த்த ஜீவாவின் வரலாறு முக்கியம் படமும் பாக்ஸ் ஆபிஸில் சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

   நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

  வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. த்மிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளில் எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது.

   மாண்டஸ் புயலால் சேதம்

  மாண்டஸ் புயலால் சேதம்

  தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக மாண்டஸ் புயல் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. புயல் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்பதால், அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   கம்பேக் கொடுப்பாரா வைகைப்புயல்?

  கம்பேக் கொடுப்பாரா வைகைப்புயல்?

  நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, வசூலிலும் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் நாளில் புயல் காரணமாக தடுமாறினாலும், அடுத்தடுத்த நாட்கள் அவருக்கு சாதகமாக இருக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   வரலாறு முக்கியம் கலெக்‌ஷன்

  வரலாறு முக்கியம் கலெக்‌ஷன்

  அதேபோல், இந்த வாரம் வெளியான ஜீவாவின் 'வரலாறு முக்கியம்' திரைப்படமும் மாண்டஸ் புயலால் வசூலில் சரிவை சந்தித்துள்ளது. ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ள இந்தப் படம் மூலமாக, சந்தோஷ் ராஜன் இயக்குநராக அறிமுகமாகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92வது படமான இதில், காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கேஎஸ ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள்ளனர். ட்ரெய்லர் மூலம் கவனம் ஈர்த்திருந்த வரலாறு முக்கியம், முதல் நாளில் 1.2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இது ஜீவாவின் படத்துக்கு முதல் நாளில் கிடைத்த நல்ல ஓப்பனிங் தான் என்றாலும், மாண்டஸ் புயலால் குறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் வரலாறு முக்கியம் கலெக்‌ஷன்ஸ் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

   மற்ற படங்களின் வசூல் நிலவரம்

  மற்ற படங்களின் வசூல் நிலவரம்

  ப்ரியாமணி நடித்துள்ள 'டிஆர் 56', நிதின் சத்யா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'தாதா', நட்டி நட்ராஜ், ராம்கி நடித்துள்ள 'குருமூர்த்தி' ஆகிய திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் கவனம் பெறவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதேபோல், கன்னடத்தில் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ள 'விஜயானந்த்' படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்தப் படமும் முதல் நாளில் 30 லட்சம் மட்டுமே வசூலித்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  English summary
  Movies like Naai Sekar Returns, Varalaru Mukkiyam, Dha Dha, and Gurumoorthy were released in theaters this week. In this case, Naai Sekar Returns collected 1.5 crores on the first day and Varalaru Mukkiyam collected 1.2 crores.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X