Don't Miss!
- News
"ஈரோட்டில் நிற்க முடியாது".. எடப்பாடியிடம் "நோ" சொன்ன மாஜி.. அங்கே போய் முட்டிக்கணுமா? என்னாச்சு?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்...இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
வலுவிழந்த வைகைப்புயல்... முதல் வாரமே இப்படியா? நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வரலாறு முக்கியம் வசூல்!
சென்னை: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய வடிவேலு மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாளில் மாண்டஸ் புயல் காரணமாக தடுமாறிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வரலாறு முக்கியம் படங்களின் தற்போதைய நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாண்டஸ் புயலில் சிக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்... டல்லடித்த வடிவேலுவின் பாக்ஸ் ஆபிஸ் கனவு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பாக்ஸ் ஆபிஸ்
ரெட் கார்டு பஞ்சாயத்து எல்லாம் கடந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டும் பிசியாக வலம் வருகிறார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹிரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவானது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

வசூல் குறைந்ததால் படக்குழு அதிர்ச்சி?
லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியானது. நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், முதல் நாளில் மாண்டஸ் புயலால் தடுமாறியது. மழை, புயல் காரணமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. இதனால், முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. ஆனால், இரண்டாவது நாளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இப்போது அதிலும் படக்குழுவுக்கு அதிர்ச்சி தான் கிடைத்துள்ளது.

வலுவிழந்த வைகைப்புயல்
முதல் நாளிலே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், இரண்டாவது நாள் வசூலும் குறைந்துள்ளது. அதன்படி, இந்தப் படம் இரண்டாவது நாளில் 1.2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இதுவரை 3 கோடி ரூபாய் வசூலை தொடமுடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் ஹீரோ ஆசை இல்லாமல் வடிவேலு தொடர்ந்து காமெடி கேரக்டரில் மட்டும் நடிக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரலாறு முக்கியம் வசூல் நிலவரம்
அதேபோல், இந்த வாரம் வெளியான ஜீவாவின் 'வரலாறு முக்கியம்' திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாளில் மாண்டஸ் புயலால் அதிகம் கலெக்ஷன் செய்யாத வரலாறு முக்கியம், இரண்டாவது நாளிலும் ஏமாற்றம் கொடுத்துள்ளது. கமர்சியலாக உருவாகியுள்ள இந்தப் படம், முதல் இரண்டு நாட்களையும் சேர்த்தே 1 புள்ளி 5 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம். ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ள இந்தப் படம் மூலமாக, சந்தோஷ் ராஜன் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜீவாவுடன் காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கேஎஸ் ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
-
இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாது.. கடுப்பான தயாரிப்பாளர்.. டார்ச்சர் பண்ணும் டாப் நடிகர்?
-
என் கனவுக் கண்ணன்.. அரவிந்த் சாமிக்கு ஹார்ட்டீன் விட்ட குஷ்பு.. டிரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்!
-
சண்டையை ஸ்டார்ட் பண்ண சூர்யா ரசிகர்கள்.. முழுசா எல்சியூ உருவாகுமான்னே தெரியலையே.. என்ன ஆச்சு?