நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த ஸ்பெஷல் நாளிலா?...உற்சாகமான ரசிகர்கள்
சென்னை : தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
Recommended Video
யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

ரிலீசிற்கு தயாரான நானே வருவேன்
சில நாட்களுக்கு முன் நானே வருவேன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தது என தனுஷ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன."நானே வருவேன்" படத்திற்கு செல்வராகவன் டப்பிங் பேசி போட்டோக்கள், தனுஷ் டப்பிங் பேசிய போட்டோக்களை சமீபத்தில் செல்வராகவன் பகிர்ந்தார். இதன் மூலம் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது உறுதியாகி உள்ளது.

இரட்டை வேடங்களில் தனுஷ்
நானே வருவேன் படத்தில் தனுஷ் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபஸ்ட்லுக் போஸ்டர்களில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போட்டோக்கள் சர்ச்சையானது.

பாடலாசிரியரான செல்வராகவன்
நானே வருவேன் படத்தின் டிஜிட்டல் வெளியிட்டு உரிமம் அமேசான் பிரைம் வீடியோவிற்கும், சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கும் விற்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளதாகவும், அதில் ஒரு பாடலை செல்வராகவனே எழுதி உள்ளதாகவும், மீதமுள்ள 3 பாடல்களை யுகபாரதி எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

தனுஷ் லிஸ்டில் அடுத்ததாக நானே வருவேன்
இந்த படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் என எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. தனுஷின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான திருச்சிற்றம்பலம் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பட்டியலில் அடுத்துள்ள படம் நானே வருவேன். இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு கெட்அப்களில் தனுஷ்
இந்த சமயத்தில் படத்தின் புதிய போஸ்டர்கள் இரண்டை செல்வராகவன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டார். தமிழ், ஆங்கிலம் என இரு விதமாக வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் இரு வேறு கெட்அப்களில் இருந்த தனுஷின் புதிய லுக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.இந்த சமயத்தில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

செம பிளானா இருக்கே
நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகஸ்ட் 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்தநாளான அன்று நானே வருவேன் படத்தின் பாடல் வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதே போல் பொன்னியின் செல்வன் ரிலீசாகும் தேதியான செப்டம்பர் 30 ம் தேதி அதே நாளில் தான் நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











