கிறிஸ்துமசுக்கு ரிலீசாகும் நானியின் படம்... 4 மொழிகளில் ரிலீஸ்!

ஐதராபாத் : நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஷ்யாம் ஷிங்கா ராய்.

ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமசையொட்டி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நானி

நடிகர் நானி

நடிகர் நானி, தெலுங்குப் படவுலகில் தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளார். தமிழிலும் இவரது நடிப்பில் நான் ஈ உள்ளிட்ட படங்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கில் இவரது அடுத்த படமான ஷ்யாம் ஷிங்கா ராய் படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

3 ஹீரோயின்கள்

3 ஹீரோயின்கள்

கொல்கத்தாவை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் வீடியோவாக வெளியான நாயகன் நானியின் புதிய லுக் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 கிறிஸ்துமஸ் ரிலீஸ்

கிறிஸ்துமஸ் ரிலீஸ்

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 1ம் தேதி துவங்கி 26ம் தேதிவரை நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து படத்தின் ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமசையொட்டி படம் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 24ல் ரிலீஸ்

டிசம்பர் 24ல் ரிலீஸ்

இந்நிலையில் டிசம்பர் 24ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒரேநேரத்தில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதே நாளில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ரன்வீர் சிங் -ஜீவா நடிப்பில் 83 ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன.

ஷ்யாம் சிங்கா ராய் படம்

ஷ்யாம் சிங்கா ராய் படம்

ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் இரண்டு போஸ்டர்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. இவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மிக்கி ஜே மேயர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஹீரோ நானி

சூப்பர் ஹீரோ நானி

இதேபோல தேசிய விருதுபெற்ற ஜெர்சி படத்தின் எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நானி தொடர்ந்து நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து சூப்பர் ஹீரோவாக உருவாகியுள்ளார். இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X