»   »  நானும் ரவுடிதான்... பெயருக்கேற்றார் போல யூ/ஏ

நானும் ரவுடிதான்... பெயருக்கேற்றார் போல யூ/ஏ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நானும் ரவுடிதான் படத்திற்கு சென்சார் குழுவினர் யூஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் நானும் ரவுடிதான், முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா நடிப்பதால் படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.


Naanum Rowdy Dhaan Gets U/A

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது இந்நிலையில் படக்குழுவினர் படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.


படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் நானும் ரவுடிதான் படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்திற்கு யூ/ஏ சான்றிதழை அளித்திருக்கின்றனர்.அக்டோபர் 21ல் உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப் படம் 475 திரையரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் நானும் ரவுடிதான் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக, விஜய் சேதுபதியின் மகன் சூர்ய சேதுபதி நடித்திருக்கிறார்.


மேலும் நாயகி நயன்தாரா முதல்முறையாக சொந்தக் குரலில் இந்தப் படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார் மேற்சொன்ன காரணங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.


யூ/ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் நானும் ரவுடிதான் படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Nayanthara - Vijay Sethupathi Starrer Naanum Rowdy Dhaan has Completed the censor formalities with U/A Certificate. Nanum Rowdy Dhaan to hit screens on 21st October.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil