»   »  விக்ரம், அனுஷ்காவை சரமாரியாக அடித்து நொறுக்கிய "ரவுடி"!

விக்ரம், அனுஷ்காவை சரமாரியாக அடித்து நொறுக்கிய "ரவுடி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 வார இறுதியில் நானும் ரவுடிதான் படம் சென்னையில் மட்டும் சுமார் 3.65 கோடிகளை வசூலித்து இருக்கிறது. இதன் மூலம் விக்ரம் மற்றும் அனுஷ்காவை பாக்ஸ் ஆபீஸில் ஓரங்கட்டி வசூலில் முன்னணி வகிக்கிறார் நயன்தாரா.

கடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்திற்கு ஓபனிங் பெரிதாக அமையவில்லை என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.


அதே சமயத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமின் 10 என்றதுக்குள்ள திரைப்படம், நானும் ரவுடிதான் படத்தை விட வசூலில் பின்தங்கி இருக்கிறது.


நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

நயன்தாரா - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் முதல் 5 நாட்களில் சுமார் 1.44 கோடிகளை வசூலித்தது. இதன் மூலம் விக்ரமின் 10 என்றதுக்குள்ள படத்தை விட வசூலில் பின்தங்கி இருந்தது நானும் ரவுடிதான்.


காப்பாற்றிய ரசிகர்கள்

காப்பாற்றிய ரசிகர்கள்

நல்ல படங்களை ரசிகர்கள் என்றும் கைவிட மாட்டார்கள் என்ற கூற்றை நானும் ரவுடிதான் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கினர். இதன் மூலம் அடுத்தடுத்த நாட்களில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்.


2 வாரங்களில்

2 வாரங்களில்

12 நாட்கள் இறுதியில் சென்னையில் மட்டும் சுமார் 3.35 கோடிகளை அள்ளியிருக்கிறது நானும் ரவுடிதான். மிகப்பெரிய ஓபனிங் இல்லாத போதும் கூட தனது அபாரமான நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் நயன்தாரா. காது கேட்காத காதம்பரியாக வரும் நயன்தாரா இந்தப் படத்தில் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக "எனக்கு காது கொஞ்சம் கேட்காது, இதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க" என்று அவர் சொல்லும் காட்சிகளில் அரங்கமே அதிர்கிறது.


10 என்றதுக்குள்ள

10 என்றதுக்குள்ள

விக்ரம் - சமந்தா நடிப்பில் வெளியான 10 என்றதுக்குள்ள திரைப்படம் மிகப்பெரிய ஓபனிங் பெற்றபோதும் வசூல் ரீதியாக பின்தங்கி விட்டது. முதல் வாரத்தில் 5 கோடிகளை வசூலித்த இப்படம் 12 நாட்கள் இறுதியில் சுமார் 2.23 கோடிகளை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ருத்ரமாதேவி

ருத்ரமாதேவி

அனுஷ்காவின் நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி திரைப்படம் 3 வார இறுதியில் சுமார் 1.34 கோடிகளை வசூலித்து இருக்கிறது.திரைக்கதை சொதப்பிய போதும் முழுவதும் வீழ்ந்து விடாமல் படத்தைத் தாங்கிப் பிடித்து வருகிறது அனுஷ்காவின் நடிப்பு.
நயன்தாராவின் ஆதிக்கம்

நயன்தாராவின் ஆதிக்கம்

நானும் ரவுடிதான் படம் மட்டுமின்றி, நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் மற்றும் மாயா படங்களும் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 10 வார இறுதியில் தனி ஒருவன் 6.65 கோடிகளையும், 7 வது வார இறுதியில் மாயா 3.32 கோடிகளையும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது.


English summary
Box Office: Vijay Sethupathi - Nayanthara Starrer Naanum Rowdy Thaan Beats Vikram's 10 Endrathukulla at Chennai Box Office. 2 Weeks End Naanum Rowdy Thaan Collects Rs 3.35 crore, Same time Vikram's 10 Endrathukulla collected 2.23 Crores Only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil