இளமை சீக்ரெட் இதுதானா...வேற லெவல் மேடம் நீங்க...ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா

சென்னை : 1980 களில் தமிழ், மலையாளத்தில் டாப் நடிகையாக இருந்தவர் நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன நதியா, நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று விட்டார்.

Recommended Video

ஒற்றை காலை தூக்கி யோகா செய்யும் நதியா… இளமையின் ரகசியம் இது தானா?

கொடும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!

ரஜினி, சத்யராஜ், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்திலேயே 1988 ல் திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்கா பறந்தார்.

 திருமணத்திற்கு பிறகும் நடிப்பு

திருமணத்திற்கு பிறகும் நடிப்பு

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். முதலில் அமெரிக்காவிலும், பிறகு லண்டனிலும் கணவன் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த நதியா, பிறகு மும்பையில் வந்து செட்டில் ஆகி விட்டார்.

ரீஎன்ட்ரி கொடுத்த நதியா

ரீஎன்ட்ரி கொடுத்த நதியா

1994 ல் கடைசியாக பிரபுவின் 100 வது படமான ராஜகுமாரன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2004 ல் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றையும் தொகுத்து வழங்கி வந்தார்.

இப்பவும் பிஸி நடிகை

அதற்கு பிறகு மார்க்கெட் குறையாமல் தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழி படங்களில் கலக்கி வருகிறார். கடைசியாக தமிழில், திரைக்கு வராத கதை என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

54 வயதில் இத்தனை அழகா

54 வயதில் இத்தனை அழகா

54 வயதாகும் நதியாவிற்கு இப்போதும் மார்க்கெட் குறையாமல் இருப்பதற்கு அவரது ஃபிட்னஸ், அழகு, இளமை தோற்றம் தான் காரணம். இதற்கு காரணம் தான் தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா செய்வது, மகிழ்ச்சியாக இருப்பது தான் என அவரே பல பேட்டிகளில் கூறி உள்ளார்.

ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா

ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா

இந்நிலையில் இன்று ஃபிட்னஸ் வீடியோ ஒன்றை நதியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வழக்கமாக உடற்பயிற்சி செய்வது உடல், மனம், ஆன்மாவிற்கு தரும் கவுரவம் என அத்துடன் கேப்ஷன் பதிவிட்டுள்ளார் நதியா. இதற்கு முன் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டும், அதற்கு பிறகும் தான் யோகா செய்யும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார் நதியா.

More from Filmibeat

Read more about: nadhiya நதியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X