»   »  தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் சங்க போராட்டம் அறிவிப்பு!

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் சங்க போராட்டம் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 8-ம் தேதி போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Nadigam sangam protests to set up CMB

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் சார்பில் அற வழியில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, திரைத்துறையினர் டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை நோக்கி திரையுலகினரின் பேரணி நடைபெறும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் அடையாளப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது நடிகர் சங்கம். திரைத்துறையினர் பெரும்பாலானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

English summary
TN farmers are in the struggle to set up Cauvery Management Board. In this case, Artiste association has announced that the strike will be held near Valluvar Kottam on April 8 to insisting to set up CMB.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X