»   »  நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் - கருணாஸ்

நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் - கருணாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். இதற்காக நாடக நடிகர்களுக்கு நன்றி செலுத்தும் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.

இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி அறிவிப்பு கூட்டம்

நன்றி அறிவிப்பு கூட்டம்

நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். இதற்காக நாடக நடிகர்களுக்கு நன்றி செலுத்தும் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள காட்டுமுனியப்பன் கோவில் சமுதாயக்கூடத்தில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நாடக நடிகர்கள் கலந்து கொண்ட நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது தொடர்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிடாய் வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் கருணாஸ், செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், நடிகர் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டு, காட்டு முனியப்பனுக்கு 51 தேங்காய் உடைத்தனர். இதைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினர்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

நேர்த்தி வழிபாடு முடிந்ததும் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது "எங்களை வெற்றி பெற வைத்த அனைத்து நாடக நடிகர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். தற்போது நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நாங்கள் சந்தித்தபோது முதன்மையான தேர்தல் வாக்குறுதி என்னவென்றால் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதுதான். அதன்படி தற்போது தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம்.

ஒப்பந்தம் ரத்து

ஒப்பந்தம் ரத்து

இப்போது தான் முன்னாள் தலைவர் சரத்குமார், தற்போதைய தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷாலிடம் நடிகர் சங்கத்திற்கான பத்திரங்களை வழங்கி உள்ளார்.இதைத்தொடர்ந்து சத்யம் நிறுவனத்தினரிடம் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான பணிகளை தலைவர் மற்றும் எங்களின் வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

இந்த ஆண்டு முதல் முறையாக நடிகர் சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. வரக்கூடிய ஆண்டுகளில் மறைந்த நடிகர், நடிகைகளுக்கு எங்களின் தலைமை அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கி அவர்களின் நினைவு தினங்களில் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு முழுமையான கருத்துக்களை தெரிவிக்க கூடிய அதிகாரம் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது" இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

தியாகராஜ பாகவதருக்கு அஞ்சலி

தியாகராஜ பாகவதருக்கு அஞ்சலி

திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவரும், தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டாராகவும் இருந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் நினைவு தினம் நேற்று ஆகும். இதையொட்டி சங்கிலியாண்டபுரத்தில் மணல் வாரித்துறையில் உள்ள அவரது கல்லறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் கருணாஸ், செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், உறுப்பினர் ஜெரால்டு உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பாகவதருக்கு மணிமண்டபம்

பாகவதருக்கு மணிமண்டபம்

தொடர்ந்து தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ், பூச்சி முருகனிடம், விஸ்வ கர்ம மகா ஜன சபையினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், செயலாளர், பொது செயலாளரிடம் முறைப்படி மனுவாக கொடுக்க அறிவுறுத்தினர். மனு கொடுத்த பின் சங்க பொதுக்குழு, செயற்குழுவில் பேசி மணிமண்டபம் கட்டுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என பூச்சிமுருகன் கூறினார்.

English summary
Nadigar Sangam Association: Actor Association Vice - President Karunas Says "3 thousand members of the association are given welfare assistance".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil