»   »  நடிகர் சங்கத்திற்கு 'போஸ்டர்கள்' மூலம் பதிலடி கொடுக்கும் அஜீத் ரசிகர்கள்

நடிகர் சங்கத்திற்கு 'போஸ்டர்கள்' மூலம் பதிலடி கொடுக்கும் அஜீத் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்திற்கு பதிலடியாக அஜீத் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற 17 ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிக்கு நாலாபுறமும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nadigar Sangam: Ajith fans Poster Caused Stir

மேலும் அந்த அறிக்கையில் அஜீத்தை, விஷால் மறைமுகமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. ஒருபக்கம் இதனை தாங்கள் வெளியிடவில்லை என்று நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் நடிகர் சங்கத்தைக் கண்டித்து போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். தீனா, பில்லா படங்களில் இடம்பெற்ற வசனங்களை போஸ்டர்களாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் 'இது தமிழ்நாடு இல்லை தலநாடு' போன்ற பஞ்ச் வசனங்களையும் அஜீத் ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விஷாலுக்கும், அஜித்திற்கும் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அஜீத் ரசிகர்கள் இப்படி போஸ்டர்களை வெளியிடுவதால் பிரச்சினை மேலும் பெரிதாக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

English summary
Celebrity Cricket: Ajith fans Poster Caused Stir in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos