»   »  நடிகர் சங்கத்தில் பிணக்கு...? பொன்வண்ணனுக்கு எதிராக முதல் குரல்!

நடிகர் சங்கத்தில் பிணக்கு...? பொன்வண்ணனுக்கு எதிராக முதல் குரல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாண்டவர் அணி என்ற பெயரில் நடிகர் சங்கத் தேர்தலில் நின்று வென்று பொறுப்பேற்று, தினமும் குறைந்தது நான்கு செய்திகளாவது மீடியாவுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும் விஷால் அணியில் முதல் பிணக்கு வந்துவிட்டது.

இதை அவர்கள் பிரஸ் ரிலீஸ் அனுப்பிச் சொல்லவில்லை என்றாலும், அணியின் பின்னாலிருந்து இயங்கிய ஜேகே ரித்தீஷ் போட்டு உடைத்துவிட்டார்.

Nadigar Sangam: Allegation on Ponvannan

துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் ராஜினாமா செய்ததாகவும், அதை ஏற்காமல் விஷால் அன்ட் கோ சமாதானம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜேகே ரித்தீஷ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜேகே ரித்தீஷ் கூறியிருப்பதாவது:

"நடிகர் சங்கத்தின் முதல் பொதுக் குழுவில் நிறைய சொதப்பல்கள் நடந்தது உண்மைதான். அவர்களுக்கு அனுபவமில்லை. ஆனால் பொன்வண்ணனுக்கு மேடை நாகரீகமே தெரியவில்லை.

அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். நான்தான் தடுத்தேன். அந்தக் கோபம் அவருக்கு. நடிகர் சங்கத்தில் பொன்வண்ணன் ஆதிக்கம் செய்வதாக புகார்கள் உள்ளது. அவரால் தான் பாண்டவர் அணிக்கு பிரச்னை என்று கருதுகிறேன்."

ஜேகே ரித்தீஷ் சொன்னதை, எதிர் முகாமைச் சேர்ந்த ராதாரவியும் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
JK Ritheesh, the backbone of Paandavar Ani has alleged Nadigar Sangam Vice President Ponvannan as 'confusing the new team'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil