»   »  காவி்ரி, ஸ்டெர்லைட் விவகாரம்... நாங்களும் களத்திலிருங்குவோம் - நடிகர் சங்கம்

காவி்ரி, ஸ்டெர்லைட் விவகாரம்... நாங்களும் களத்திலிருங்குவோம் - நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளில் மக்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், உதயா, விக்னேஷ், பிரேம், பிரகாஷ், குட்டி பத்மினி, நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ..

Nadigar Sangam announces protest in support of Cauvery, Sterlite issues

நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், "இப்போது தமிழ் சினிமாவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை. டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. எந்த ஒரு தொழிலுமே விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்னர் செழிப்பாகத்தான் இருக்கும். ஆனால் நமது சினிமா மட்டும் பல பிரச்சனைகளை சந்தித்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதை சரி செய்யத்தான் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எப்போதும் வேலை நிறுத்தம் என்றால் சில நாட்கள் நடைபெறும் அதன் பின்னர் நிறைவடைந்துவிடும் ஆனால் மாறாக இந்த முறை வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக திரையுலகமே உள்ளது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இறுக்கமான சூழ்நிலை இளகவைக்க நாங்கள் சில நாட்களாக இரவும் பகலும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்," என்றார்.

துணை தலைவர் பொன்வண்ணன் பேசுகையில், "நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டுக் குடும்பமாகத்தான் வேலை செய்து வந்தார்கள். திரையரங்குகளில் ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக வேண்டும். ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக இருக்கும் போது நடிகர்களின் படங்கள் தோல்வி அடையும்போது அவர்களின் சம்பளத்தை குறைக்கவும், படம் வெற்றி பெறும் போது அவர்கள் அடுத்த படத்திலிருந்து அதற்கு ஏற்றவாறு சம்பளத்தை ஏற்றுவதற்கும் உதவியாக இருக்கும். எந்த வித கணக்கு வழக்கும் இல்லாமல் ஒரு நடிகரை சம்பளத்தை குறைக்க சொல்லும் போது அந்த நடிகர்கள் மனரீதியாக வருத்தப்படுகிறார்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டணம் அதிகமாக இருப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது. அதனால் அந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சினிமா என்பது மக்களுக்காகத்தான். நாங்கள் இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவாக இருப்போம்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லெட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும்," என்றார்.

English summary
Nadigar Sangam has announced that it would take part in protests in support of Cauvery Management board and Sterlite issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X