»   »  கலாட்டாவுக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு.. ரஜினி, கமல் 'ஆப்சென்ட்'!

கலாட்டாவுக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு.. ரஜினி, கமல் 'ஆப்சென்ட்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்திற்கு முக்கிய நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோர் வரவில்லை.

நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று மதியம் 2 மணிக்கு துவங்கி சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நடந்து வருகிறது.

Nadigar Sangam annual GB meet: Rajini, Kamal absent

கூட்டத்தின்போது அடையாள அட்டை இல்லாமல் வந்த சங்க உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த இடம் கலவர பூமி போன்று காட்சியளித்தது.

தலைவர் நாசர் தலைமையில் நடந்து வரும் கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்திற்கு முக்கிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோர் வரவில்லை.

அண்மையில் கமலின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரது அலுவலகத்திற்கு சென்றார் ரஜினி. ஆனால் அவர்கள் இருவரும் பொதுக் குழு குறித்து ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Seniors and VIP actors Rajinikanth and Kamal Haasan have stayed away from Nadigar Sangam annual general body meeting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil