»   »  நடிகர் சங்கக் கட்டடப் பணி அடுத்த மாதம் தொடங்கப்படும்: நடிகர் விஷால்

நடிகர் சங்கக் கட்டடப் பணி அடுத்த மாதம் தொடங்கப்படும்: நடிகர் விஷால்

Written By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கக் கட்டடப் பணி அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் திரையுலகமே சிறப்பாக இருக்கும்என்றும் அவர் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் திரையுலகம் சிறப்பாக இருக்கும்என்று கூறினார்.

 Nadigar sangam building construction will start next month says Vishal

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க பணியாற்றுவேன். நடிகர் சங்கத் தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் கையேந்தும் நிலை வரக் கூடாது என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன் .தயாரிப்பாளர்கள், சிறு தயாரிப்பாளர்களுக்கு நல்லது இதுவரை எதுவும் நடக்கவில்லை. நாங்கள் தெர்தலில் வெற்றிபெற்றால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சொந்தமாக நிலம் வழங்கப்படும் என்றும் அவர் கூரியுள்ளார்.

English summary
Nadigar sangam building construction will start next month says Vishal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil