»   »  நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி, கமல்

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி, கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அவ்வப்போது கூறி வந்தார். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை துவங்கியது.

Nadigar Sangam building construction work kicks off

இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல் ஹாஸனும் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

Nadigar Sangam building construction work kicks off

ரூ. 26 கோடியில் கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடம் 4 மாடிகளை கொண்டதாக இருக்குமாம். அந்த கட்டிடத்தில் நடிப்பு பயிற்சிக் கூடம், ஜிம், தியேட்டர் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளது.

Nadigar Sangam building construction work kicks off

நடிகர் சங்க கட்டிடம் சென்னை தியாகராய நகரில் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தை கட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nadigar Sangam building construction work kicks off Nadigar Sangam building construction work has kicked off on friday morning as announced.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil