»   »  நடிகர் சங்க புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா... முதல் செங்கல்லை வைக்கிறார்கள் ரஜினி கமல்!!

நடிகர் சங்க புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா... முதல் செங்கல்லை வைக்கிறார்கள் ரஜினி கமல்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிக-ர் சங்க புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 31-ம் தேதி நடக்கிறது. ரஜினியும் கமலும் இந்த விழாவில் பங்கேற்று, கட்டடத்துக்கான முதல் செங்கல்லை எடுத்து வைக்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது.

Nadigar Sangam building foundation stone laying ceremony on March 31st

இதில் இருந்த பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட ஏற்பாடுகளைச் செய்து வந்தது புதிதாக நிர்வாகத்துக்கு வந்த விஷால் அணி.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி பல கோடி நிதி திரட்டப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன.

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகளை தொடங்குவது குறித்து முடிவு செய்ய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டமும், நடிகர் சங்க அறங்காவலர்கள் குழு கூட்டமும் சென்னையில் நடந்தது.

செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, பூச்சி முருகன், குட்டி பத்மினி, உதயா, நந்தா, மனோபாலா, ஹேமச்சந்திரன், அஜய்ரத்னம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வருகிற 31-ந் தேதி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மாநகராட்சி அனுமதியை பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. முதல் செங்கல்லை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வழங்கவிருக்கிறார்கள்.

English summary
The foundation stone laying ceremony for Nadigar Sangam's new building will be held on March 31st.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil