»   »  நடிகர் சங்கம்: நட்சத்திரக் கிரிக்கெட்டில் எந்த ஊருக்கு யார் கேப்டன்?..முழு விவரங்கள் உங்களுக்காக

நடிகர் சங்கம்: நட்சத்திரக் கிரிக்கெட்டில் எந்த ஊருக்கு யார் கேப்டன்?..முழு விவரங்கள் உங்களுக்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது.

Nadigar Sangam: Captains Announced for Star Cricket

சுமார் 8 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகளின் கேப்டன் மற்றும் அணிகளின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

மேலும் நேற்று இரவு நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் டிராபி கோப்பையையும் அறிமுகம் செய்து விட்டனர்.

இந்நிலையில் 6 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சூர்யா- சென்னை சிங்கம்ஸ்

விஷால்- மதுரை காளைஸ்

ஆர்யா- சேலம் சீட்டாஸ்

சிவகார்த்திகேயன்- திருச்சி டைகர்ஸ்

ஜெயம் ரவி- நெல்லை ட்ராகன்ஸ்

கார்த்தி- கோவை கிங்ஸ்

விஜய் சேதுபதி- ராம்நாடு ரைனோஸ்

ஜீவா- தஞ்சை வாரியர்ஸ்

இந்த கிரிக்கெட் போட்டியை நடிகர் சிவா, குஷ்பூ இருவரும் தொகுத்து வழங்குவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு நடிகரின் சொந்த மாவட்டத்துடன் இந்தத் தகவல்கள் ஒத்துப் போவது குறிப்பிடத்தக்கது.

English summary
Nadigar Sangam: Now Captains Name Announced for Star Cricket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil