»   »  சோ மறைவு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

சோ மறைவு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் நாசர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

Nadigar Sangam condoles to Cho Ramaswamy death

சோ... இந்த ஒற்றை வார்த்தைக்குப்பின் அடுக்கடுக்காய் பல படிமங்கள் தொகுத்து நிற்கின்றன. வழக்கறிஞராய், நாடகவியலாளராய், திரைப்படநடிகராய், விமர்சகராய், பத்திரிகையாளராய் என நீண்டு கொண்டே போகின்றன.

ஆனால் ஒவ்வொரு படிமமும் இதுவரை யாரும் பதித்திராத வகையில் தனக்கென தனியொரு பாணி வகுத்தவர்... மனதுக்கு பிடித்தோரை கண்மூடித்தனமாய் பின்பற்றும் இன்றைய அரசியல் சூழலில், தான் ஆதரித்தோரே தவறுசெய்யும் போது கடுமையாக விமர்சித்தும், விமர்சிக்கப்பட்டவர் சரியானதொரு காரியம் செய்யும்போது பெருமனதோடு ஆதரிப்பதும்.... பத்திரிகையாளராய் அவருடைய முதிர்ச்சி பாராட்டுக்குரியது, பின்பற்றக்கூடியது.

அன்னாரை இழந்துவாடும், உற்றத்தார், சுற்றத்தார், நாடகம், திரைப்படம் சார்ந்தோர், பத்திரிகையாளர் அனைவரோடு தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை பிரிந்த துக்கத்தில் பங்கு கொள்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைவதாக.

English summary
Nadigar Sangam has conveyed its grief ans condolences to late legend Cho Ramaswamy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos